1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வாய் துர்நாற்றம் உடனடியாக போக்க அதிமதுரத்தின் வேரை...

1

தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண்டிருக்கும் அதிமதுரம், மானிடர்களுக்காக இயற்கை உயிர்கொடுத்த ‘மதுரப் பெட்டகம்!’ குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து! சீன மருத்துவத்தில் ‘முதன்மை மருந்து’ எனும் அந்தஸ்து அதிமதுரத்துக்கு உண்டு!

அதிங்கம், மதுகம், அட்டி ஆகியவை இதன் வேறுபெயர்கள். இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.

அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். 

சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். 

‘அதிமதுர ரசாயனம்’ பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்…கீச்… எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். 

 வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

 இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

இருமல் வறட்டு இருமல், சளி இருமல் பிரச்சனை நீண்ட நாட்கள் பாடாய்படுத்தும். அதிமதுரத்தூளை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் நாள்பட்ட இருமலை குணப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.

குழந்தைகளின் இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் அதிமதுரப்பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலக்கவும். வெதுவெதுப்பான நீரில் அதுமதுரம் சேர்த்து குழந்தைகளுக்கு இந்த இனிப்பு கஷாயத்தை இரண்டு முறை கொடுக்கலாம்.

அதிமதுரம் மூலிகை அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. மேலும் ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்டவை. இது மாதவிடாய் கால தசைப்பிடிப்புக்கும், வலிக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவும்.

கீல்வாதம், மூட்டுவலி, மூட்டுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வலியை குறைக்க அதிமதுரம் பயனளிக்கும். பாதிப்பு அறிகுறி குறைய சில நாட்கள் லைகோரைஸ் டீ குடிக்கலாம்.

காய்ச்சல் தலைவலி வந்தால் அதிமதுரம் தூள் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம். மூக்கடைப்பு மற்றும் மார்பு நெரிசலுக்கு சில அதிமதுர வேர், துளசியை கொதிக்க வைத்து ஆயுர்வேத கஷாயம் தயாரிக்கலாம். இதில் புதினா இலைகளை சேர்த்தும் குடிக்கலாம்.

வாய் துர்நாற்றம் உடனடியாக போக்க அதிமதுரத்தின் வேரை மென்று சாப்பிடவும். தடிப்புத்தோல், தோல் அரிப்பு, அரிக்கும் தோலழற்சி, சொறி போன்ற தோல் பிரச்சனைகளுக்கு எதிராக போராட அதிமதுரம் உதவும். தோல் அழற்சியை சரி செய்யலாம்.

முகத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த அதிமதுரம் பொடியை முகத்துக்கு பயன்படுத்தலாம். இது முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு அதிமதுரம் பொடியை பயன்படுத்தலாம். பொடுகு தொல்லைக்கு அதிமதுரத்துடன் கறிவேப்பிலை பொடியை சேர்த்து பயன்படுத்தலாம்.

Trending News

Latest News

You May Like