1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம்..!

1

தானிய வகைகளில் சிவப்பு அரிசியில் மட்டும்தான் வைட்டமின் ஈ உள்ளது.சிவப்பு அரிசியில் நார்ச் சத்தும் மாவுச் சத்தும் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இதில் உள்ள தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் நன்கு வளர்ச்சி அடையும். வாய்ப் புண்கள் குணமாகும்.

உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும். இந்த அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி சாப்பிடுவது பல மடங்கு நல்லது. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.

காலை உணவாக இந்த அரிசியினால் செய்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் அன்றைய பொழுது முழுவதும் நமது உடல் மிகுந்த உற்சாகமாக இருக்கும். சிகப்பு அரிசியில் புட்டு, கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள்:-

♦மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு சிவப்பு அரிசியில் குறைவான கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு உள்ளிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. 

♦ புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படும் அரிசி என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். 
♦ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைப்பது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது. 

♦எளிதாக ஜீரணமடையும் என்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது. வயிறு எளிதாக இருப்பது போல தோன்றும். 

♦நல்ல ஆரோக்கியம், குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருத்தல் ஆகியவற்றுக்கு உகந்தது. 
♦உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். இத்துடன் உடற்பயிற்சியையும் மேற்கொண்டால் உடல் எடை குறையும். 

♦உடல் பலம் பெறவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். 

♦அடுத்ததாக உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. வெயில் காலத்தில் உடல் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்படும். ஆனால், சிவப்பு அரிசி உடல் உஷ்ணத்தைத் தடுக்கிறது. 

♦பெண்கள், குறிப்பாக தாய்மார்கள் சிவப்பு அறியாய் உண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இதர உடல் பிரச்னைகளும் சீராகும். 
♦நீரிழிவு நோயாளிகள், அதிக ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த உணவு. 

♦மேலும், புற்றுநோயைத் தடுக்கிறது, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது. 

♦சிவப்பு அரிசியில் கஞ்சி, களி, தோசை, புட்டு, இடியாப்பம் ஆகியவை செய்து சாப்பிடலாம். காலை உணவாக சாப்பிட்டால் மிகவும் நல்லது என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். 

Trending News

Latest News

You May Like