1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உடல் மெலிந்தவர்கள் நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கி அதை...

1

நேந்திரம் பழத்தில் நல்ல சத்துக்கள் அதிகளவு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் இது.

இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து 48 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் உடல் எடை கூடுவார்கள்.

நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள் சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். இதனை பழமாக சாப்பிட்டால் தான் முழு பலனையும் பெற முடியும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள். 

நேந்திரம் வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாகும், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்க நன்றாகப் பழுத்த நேந்திரப் பழத்தை நறுக்கி அதனுடன் சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து நன்றாக பிசைந்து ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாகவும் உள்ளது.

தொடர் இருமல் குணமாக நன்றாக பழுத்த நேந்திரம் பழத்துடன் கால் ஸ்பூன் மிளகு பொடியை கலந்து தினந்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தொடர் இருமல் சரியாகும்.

நேந்திரம் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதய தசைகள் வலுவடையும். தினமும் நேந்திரப்பழத்தை சாப்பிட்டு வருவதனால் இதய நோயிலிருந்து விடுபடலாம். இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான அனைத்து சத்துக்களும் நேந்திரம் பழத்தில் உள்ளன.

நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன.

காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு முட்டையுடன் இந்த நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வர காச நோய் நீங்கும்.

நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன், சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

Trending News

Latest News

You May Like