1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கண்புரை நோய்கள், கண் வீக்கம் போன்ற கண் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருகிறது இந்த அரிசி..!

1

பொதுவாக அரிசி வகைகளை பாலீஷ் செய்யும் போது அதில் இருக்கும் பி- காம்ப்ளஸ் பெருமளவு வெளியேறிவிடும். அதனால் நமக்கு அரிசியில் இருந்து அதிக அளவு மாவுச்சத்து மட்டுமே கிடைக்கிறது. இந்த மாவுச்சத்துதான் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்பாக உடலில் மாற்றப்படும் போது ரத்த அடர்த்தி இதயத்தை பாதிக்க செய்கிறது.

வரகு அரிசியில் இந்த மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் இதை அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம். கொழுப்பு அதிகம் இல்லாதது. இதில் இருக்கும் கொழுப்பும் நல்ல கொழுப்பு என்பதால் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது.

சிறுதானியங்கள் காரத்தன்மை வாய்ந்தது என்பதால் இவை செரிமானக்கோளாறுகளையும் உண்டாக்காது. எளிதாக செரிமானம் ஆகும். வரகில் இருக்கும் புரதம் நல்ல புரதம் என்று சொல்லலாம். உயிர்ச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால் குழந்தைகளுக்கு ஆறுமாத காலத்துக்கு பிறகு கஞ்சி கொடுக்கும் போது வரகு கஞ்சியை சேர்க்கலாம். 

  • குழந்தைகளுக்கு அடர்த்தியான திரவ உணவு கொடுக்கும் போது ஸ்மூத்தி, பழவகைகளுக்கு அடுத்து உணவில் கஞ்சி தான் முக்கியம். கஞ்சி சத்து தரக்கூடியது என்பதால் தான் இது சத்துகஞ்சி என்றழைக்கப்படுகிறது. ராகி, அரிசியில் மட்டும்தான் கஞ்சி தயாரிக்கமுடியும் என்பதில்லை. தானியங்களில் கம்பு, திணை, சோளம், வரகு என பலவற்றிலும் சத்தான ஆரோக்கியம் நிறைந்த கஞ்சி தயாரிக்க முடியும். சிறுதானியங்களை வறுத்து பொடியாக்கி வைத்தும் கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம். அவையும் சத்து நிறைந்தது. 
  • பலவீனமான பெண்கள் மாதவிடாய் காலங்களில் மேலும் பலவீனமடையும் போது அவர்கள் மாதவிடாய் காலங்களிலும், மெனோபாஸ் காலங்களிலும் மூட்டுவலி உபாதைக்கு ஆளாக கூடும். பெண்களுக்கு பலம் கொடுத்து வலி உபாதையை தடுத்து விடக்கூடிய தன்மை வரகுக்கு உண்டு.
  • வரகில் இருக்கும் புரதம் நல்ல புரதம் என்பதால் இது சிறுநீரகத்தில் அதிக நச்சு சேராமல் தடுக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் போன்றவை தடுக்கப்படுகிறது. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதால் உடலில் இருக்கும் ரத்தத்தில் இருக்கும் நச்சுநீர் முழுமையும் வெளியேற்றி சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.
  • வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குண்ங்களும் இவை கொண்டிருப்பதால் உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்.
  • நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்பை கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக அரிசி உணவை தவிர்த்து அவ்வபோது வரகரிசி சேர்க்கலாம். தினசரி எடுக்காமல் வாரத்துக்கு மூன்று நாள் வரை இதை எடுத்துகொள்ளலாம்.
  • வரகு அரிசியில கோதுமைய விட அதிகமா நார்ச்சத்து இருக்கிறதா சொல்றாங்க. மாவுச்சத்து இதுல குறைவா இருக்குறதால ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.வரகு அரிசியில நார்ச்சத்து அதிகமா இருக்கிறதால, அதிக உடல் எடையால அவதிப்பட்டு வர்றவங்க உணவுல வரகு சேர்த்துட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.
  • வரகு அரிசியானது சர்க்கரை நோயாளிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது, அதாவது இது ரத்தத்தில் உள்ள‍ ச‌ர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்  வைக்கச் செய்கின்றது. மூட்டுவலிப் பிரச்சினைகள், மூட்டு வீக்கம், எலும்புகள் வீக்கம் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.
  • கண்புரை நோய்கள், கண் வீக்கம் என்ற கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது, மேலும் இது உடல் சூட்டினைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றது.
  • நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கல்லீரல் அலற்சி, கல்லீரல் செயலினை மேம்படுத்துதல், நிணநீர் சுரப்பிகளை சீராக்கவும் உதவுகிறது. 
  • கோடைகாலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுகும்.
  • வரகரிசியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.
  • வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியம் மேம்படும்.
  • வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம் என்பதால், வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது, வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.
  • வரகரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.

Trending News

Latest News

You May Like