1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? குழந்தைக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு கொடுப்பது இதற்காக தான்..!

1

முன்னோர்கள் கால வழக்கத்தில் குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது சங்கு பயன்படுத்துவதுண்டு. குழந்தைக்கு உணவு அளிக்கும் போது மட்டும் உலோகங்களில் முதன்மையானதாக வெள்ளிக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. வெள்ளிப்பாத்திரங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு என்ன நன்மைகளை செய்யும் தெரியுமா ?

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாலாடை முதல் உணவு கொடுக்க பயன்படுத்தும் கிண்ணம், ஸ்பூன், டம்ளர், குழாயில் உறிஞ்சிக் குடிக்கும் டம்ளர் என்று எல்லா வகையான பொருட்களுக்கும் வெள்ளி உலோகத்தை முதல் தேர்வாக தேர்வு செய்கின்றோம். வெள்ளி பொருட்களுக்கு பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன? வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதனை தெரிந்து கொண்டால் இனி நீங்களும் வெள்ளிப் பொருட்களை தவிர்க்காமல் வாங்கி விடுவீர்கள்.

குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அளிக்க வெள்ளிக்கிண்ணம் உதவும் என்று நம்பப்படுகிறது. சூடான உணவை வெள்ளிக்கிண்ணத்தில் வைக்கும் போது வெள்ளி உலோகத்தில் இருக்கும் பாக்டீரியல் எதிர்ப்பு பண்புகள் உணவில் கலந்து இயற்கையாகவே குழந்தைக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.

வெள்ளிக்கிண்ணத்தில் உணவு கொடுப்பதன் மூலம் வளர்சிதை மாற்றம் மேம்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. வெள்ளி பாத்திரங்களில் சாப்பிடுவதால் பல நோய்கள் தடுக்கப்படுகிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உணவை குழந்தைக்கு பதமாக சமைத்து தரும் அம்மாக்கள் அந்த உணவின் சத்தும் குழந்தைக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் வெள்ளிப்பாத்திரம் சிறந்த தேர்வாக இருக்கும்.

இயல்பாக உணவை சூடாக வைக்கும் போது மற்ற பொருள்களை காட்டிலும் இதில் நச்சுத்தன்மையும், உணவில் ரசாயன மாற்றமும் உண்டாகாது. மண் சட்டியை போன்றே வெள்ளி பாத்திரங்களும் நச்சுத்தன்மை உண்டாக்காதவை. உலோகங்களில் வெள்ளி தூய்மையானது என்று சொல்வார்கள்.காரணம் இதை தயாரிக்கும் போது நடைமுறையில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு பின்பே சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பிறகே வேண்டிய வடிவில் இவை பாத்திரமாக வடிவமைக்கப்படுவதால் இதில் நச்சுத்தன்மையில்லாத தூய்மையான பாத்திரமாக உணவின் குணங்களையும் மாற்றாமல் பாதுகாக்கிறது.

குழந்தைக்கு தண்ணீர், பால், பழச்சாறு, கஞ்சி வகையறாக்கள் என எதுவாக இருந்தாலும் அதை வெள்ளி டம்ளரில் கொடுத்தால் குழந்தைக்கு பருவகாலத்தில் வரக்கூடிய உபாதைகள் எதுவுமே வராது. அதோடு வெள்ளி தண்ணீரை இயற்கையாகவே சுத்திகரிக்க கூடிய தன்மை கொண்டிருக்கிறது. தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகளை சுத்திகரிக்கும் தன்மை வெள்ளிக்கு உண்டு.

ஆயுர்வேதத்தில் தங்கம், வெள்ளி மற்றும் செம்பு நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி செரிமான பிரச்சனைகளை உண்டாக்காது. கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு. உணவு பொருள்கள் கெடாமல் பாதுகாக்கும் தன்மை வெள்ளிக்கு உண்டு. வெள்ளி கிண்ணத்தில் குழந்தைக்கு உணவு கொடுத்தால் இவை மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

வெள்ளி பாத்திரத்தில் சாப்பிட்டால் ஜீரணக்கோளாறுகள், வாயுத்தொல்லை. குடல் குறைபாடு பிரச்சனையும் இருக்காது. இதை சுத்தப்படுத்தும் போதும் அதிக சிரமம் கொள்ள வேண்டியதில்லை. இவை நுண்ணுயிர்களை தக்கவைத்துகொள்வதில்லை என்பதால் குழந்தையின் ஆரோக்கியம் நிச்சயம் பாதுகாப்புக்குள்ளாகும்.

வெள்ளி பொருட்களை வாங்கும் பொழுது கூர்மை இல்லாமல், அதிக வேலைப்பாடுகளும் இல்லாமல், எளிமையாக தேர்ந்தெடுத்து வாங்குவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வேலைப்பாடுகள் இருந்தால் அதற்கு இடையே சேரும் அழுக்குகளை எளிதாக நீக்க முடியாமல் போய்விடும். பிளைனாக இருக்கும் வெள்ளிப் பொருட்களை குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்து வாங்குங்கள். எடை குறைவாக இருந்தாலும் வெள்ளி பொருட்கள் விரைவில் நசுங்கி விடும் ஆபத்து உள்ளது என்பதால் சற்று கனமுள்ள வெள்ளிப் பொருட்களை வாங்குவது நல்லது.

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள் மட்டுமல்லாமல், பூஜைக்கு பயன்படுத்தும் வெள்ளிப் பொருட்கள், சமையலுக்கு பயன்படுத்தும் வெள்ளி பொருட்கள் என்று எந்த வெள்ளியாக இருந்தாலும், அதனை சுலபமாக சுத்தம் செய்வதற்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடா மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து ஊற வைத்து தேய்த்தால் போதும். புத்தம் புதியதாக வெள்ளிப் பொருட்கள் பளிச்சிடும்.

Trending News

Latest News

You May Like