1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் பின்பற்றிய நல்ல வழக்கம் இது..!

1

தாம்பூலம் என்று சொல்லப்படும் வெற்றிலை பாக்கு போடுவதன் மகத்துவம் இன்றுள்ள தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்.. நிச்சயம் 99 சதவீதம் பேருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பே இல்லை.

முன்பெல்லாம் அசைவம் சாப்பிட்ட பிறகு ஆற அமர உட்கார்ந்து வெற்றிலையை எடுத்து நல்லா நீவி விட்டு, காம்பை கிள்ளி தூரப் போட்டு விட்டு சுண்ணாம்பை மெல்லிசாக தடவி, பாக்கை வைத்து மடக்கி வாய்க்குள் போட்டு அதக்கி வெற்றிலை போடாமல் அந்த நாள் அசைவச் சாப்பாடு முடியாது. இன்று அப்படியா இருக்கிறது.. வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் சாவோம் என்று ஆளாளாக்கு அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ரசித்து உட்கார்ந்து வெற்றிலை போடுவதை கிராமப்புறத்தில்தான் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு போய்க் கிடக்கிறது இன்றைய நாகரீக உலகம். ஆனால் வெற்றிலையில் அத்தனை மகத்துவம் இருக்கிறது.. மருத்துவம் மறைந்து கிடக்கிறது. நிறையப் பேருக்கு அது புரிவதில்லை. ஆமா, யாரு உட்கார்ந்து நீட்டி நிதானமாக வெற்றிலை போடுவது என்று அலுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.

திருமண வீடுகளிலும் விசேஷ விருந்துகளிலும் விருந்துக்குப் பிறகு போட்டுக்கொள்வதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்திருப்பார்கள். நம் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விஷயங்கள் உண்டு. இந்த மூன்றும் குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும்.

காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக்கொள்ளலாம். துவர்ப்புச்சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக்கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.

இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.

பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. படிக்காதவர்கள் செய்யும் செயல் போல பார்க்கப்படுகிறது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் உங்கள் விருப்பத்துக்காக வேறு எதையும் சேர்க்கக்கூடாது. ஆஸ்துமா, மண்டையில் நீர்கோத்தல் போன்ற பல விஷயங்களுக்கு வெற்றிலை மருந்தாகச் செயல்படுகிறது. இந்த காம்பினேஷனில் ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளும் கிடைப்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது. எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடியது. வாயுத்தொல்லை வராது.

வெற்றிலையின் நுனி, காம்பு நீக்கி, நரம்பை லேசாக எடுத்துவிட்டு, அளவாக சுண்ணாம்பு வைத்து, பாக்கு சேர்த்து போட வேண்டும். முதலில் வரும் இரண்டு உமிழ்நீரை துப்பிவிட வேண்டும். அடுத்தடுத்து வரும் உமிழ்நீரை மட்டும்தான் விழுங்க வேண்டும். அதேபோல கடைசியாக வருவதையும் துப்பிவிட வேண்டும். அதாவது ஐந்தாறு முறை சாற்றை விழுங்கிய பிறகு சக்கையோடு சேர்த்து துப்பிவிடலாம். நீண்டநேரம் வெற்றிலையை மென்றுகொண்டே இருக்கக்கூடாது. அதுதான் பற்களில் கறை படிய காரணமாகும்.

திரிபலா சூரணம், நாயுருவி பொடி, வேப்பங்குச்சி போன்றவற்றை வைத்து பல் துலக்கும்போது பற்களில் கறை படிவதைத் தவிர்க்கலாம். பற்களுக்கும் ஈறுகளுக்கும் பலம் தரும். சரியான முறையில் தாம்பூலம் தரிக்கும்போது செரிமானம் சீராவதுடன், ஆரோக்கியமும் மேம்படும். வெற்றிலையோடு வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் சிறப்பாக்கும்.

Trending News

Latest News

You May Like