இது தெரியுமா ? இந்த 2 பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட ஒன்றாக சாப்பிட்டு விடக்கூடாது..!

எந்த உணவோடு, எந்த உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது:
மீனுடன் சேர்த்து பால் தயிர் மோர் இந்த பொருட்களை சாப்பிடவே கூடாது. இது அஜீரணக் கோளாறு கொடுப்பதோடு சேர்த்து வெண்மேகம் என்று சொல்லப்படும் தோல் பிரச்சனை உண்டாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. கூடுமானவரை எந்த அசைவ சாப்பாடு சாப்பிட்ட பின்பும் பால் தயிர் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மருத்துவ குணம் நிறைந்தது தேன். ஆரோக்கியம் நிறைந்தது நெய். தினமும் ஒரு சொட்டு நெய்யாவது உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி நெய் சாப்பிட்டால் தான் தவறு. உடல் சூட்டை குறைக்க தினமும் இரண்டு சொட்டு நெய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் தேனையும் நெய்யையும் சம அளவில் கலந்து சாப்பிட்டால் அது நஞ்சாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
நிறைய பேர் விருந்து சாப்பாடு சாப்பிட்டு முடித்த பின்பு, வாழைப்பழம் பாயாசம் பிசைந்து சாப்பிட்டு, அதன் பிறகு தயிர் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் கூடுமானவரை வாழைப்பழம் சாப்பிட்ட பின்பு தயிர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். தயிர் சாதம் சாப்பிட்ட பின்பு வாழைப்பழம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். இந்த இரண்டையும் தொடர்ந்து ஒன்றாக சாப்பிட்டு வந்தால் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நெய்யை அதிக நேரம் வெண்கல பாத்திரத்தில் வைத்து சாப்பிடக்கூடாது. அடுத்து, சாப்பாடு சாப்பிட்ட உடனேயே, பழ வகைகளை சாப்பிடாதீர்கள். உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு, பழம் சாப்பிடுவது நல்லது.
முருங்கைக்கீரை முள்ளங்கி மற்ற கீரை வகைகளை சாப்பிட்ட பின்பு பால் முட்டை இவைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சமைத்து முடித்த பின்பு, அந்த உணவோடு சமைக்காத பொருளை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை கொடுக்கும். உதாரணத்திற்கு சமைத்த உணவில் உப்பு போதவில்லை என்று அப்படியே சாப்பாட்டில் உப்பு போட்டு கலந்து சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சமயம் இப்படி செய்யலாம் தினம்தோறும் இப்படி செய்யக்கூடாது.
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சளி தொந்தரவு உள்ளவர்கள் தக்காளிப்பழம், பூசணிக்காய், முள்ளங்கி இப்படி குளிர்ச்சி தன்மை கொண்ட காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.