1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவு காராமணி..!

1

காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.

காராமணியானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் அதிக பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து எடுத்து கொள்ளவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் இரத்த சோகை நோய் ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

காராமணியில் உள்ள துத்தநாக உப்பு, லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்’ என்ற சமிக்ஞையைத் தந்துவிடும்.

காராமணியில் உள்ள கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது. எனவே இதனை உண்டு எலும்புகளைப்  பாதுகாக்கலாம்.

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது.

பக்கவாதம்(stroke), உயர் இரத்த அழுத்தம்(hypertension), ஆஸ்டியோபோரோசிஸ்( osteoporosis) போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

முகச்சுருங்களை போக்கி தோல்களை மென்மையாக வைத்திருக்க உதவும், மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
 

காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.

காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன.

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இதில் இருக்கும் ‘விட்டமின் சி’ உடலின்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Trending News

Latest News

You May Like