1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சர்க்கரை சர்னு இறங்க... இந்த கீரையை இப்படி சாப்பிட்டு வந்தால் போதும்..!

1

காசினிக் கீரையை நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருவதாகவும். சீனர்கள் காசினிக் கீரையை கல்லீரல் நோயைக் குணப்படுத்துவதற்காக பயன்படுத்தியதாகவும் ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன. காசினிக் கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவை, கொம்புக் காசினி, சீமைக் காசினி, வேர்க் காசினி மற்றும் சாலடு காசினி கீரைக்கு கானாம் கோழிக் கீரை என்ற வேறு பெயரும் உண்டு. இவை குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் பயிரிடப்படும் கீரையாகும்.

இந்தியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், சீனா, தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் காசினிக் கீரை பயிரிடப்படுகிறது.

உலகளவில் இந்தியா காசினிக்கீரையை பயிரிடுவதில் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக மலைப்பிரதேசங்களான கொடைக்கானல், ஏற்காடு மற்றும் சேர்வராயன் மலைப் பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது.

பொதுவாக கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இதனால் உடல் எடை குறையும். அந்த வகையில் காசினி கீரை குறித்து பார்ப்போம். இதை பொடி பொடியாக கட் செய்து போண்டா மாவில் கலந்து போண்டா போடுவார்கள். இது சுவையாக இருக்கும். இந்த கீரையை நன்கு சுத்தப்படுத்தி காய வைத்து பொடியாக்கி பயன்படுத்த வேண்டும். இது ஆண்மைக் குறைபாட்டுக்கு மருந்தாக பயன்படுகிறது. காசினி கீரை பொடி கூட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

இந்த பொடியை அரை ஸ்பூன் காய வைத்து அரை ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகிவிடும். இது போல் துர்நாற்றத்துடன் வெள்ளை போவதும் சரியாகிவடும்.

இந்த காசினி கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகவும் உதவுகிறது.தினமும் காலையில் பாகற்காய் சாறு, கறிவேப்பிலை சாறு வெந்தயம் போன்றவைகளுடன் காசினி கீரை பொடியையும் சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். அது போல் காசினி கீரை பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலே போதும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த கீரையை பருப்புடன் சமைக்கலாம்.

இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். அது போல் சீழ் வடிந்து கிடக்கும் புண்களையும் இந்த காசினி கீரை ஆறவைக்கும். புண் இருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டால் அதிக உதிரப்போக்கை குறைக்க கூடும். எடையை குறைக்க உதவும். இதை சூப்பாக குடித்தாலும் பலன் கிடைக்கும்.

உள்ளுறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளையும் குணப்படுத்தும் வீர்யம் இந்த காசினிக்கு உண்டு. சிறுநீரகக் கற்கள் கரையும். காசினி கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் போல காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.

காணாம் கோழிக் கீரை தான் மருவி காசினி கீரையானது. காபி பொடியில் கலக்கும் சிக்கரி இந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது. இது ஜீரண கோளாற்றை சரி செய்யும். இதய நோயை விரட்டும். உடலில் எந்த பாகத்தில் வீக்கம் இருந்தாலும் அது நீக்கும். பற்களை சுத்தப்படுத்தும். உடலில் தேவையான நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.

காயங்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த காசினிக்கு உண்டு. குறிப்பாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் வந்தால், இந்த கீரையை அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டினால், சீக்கிரமாகவே குணமாகிவிடும். உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் குணம் கொண்டது காசினி கீரை. எவ்வளவு மோசமான புண்கள் இருந்தாலும், அதை காசினி குணப்படுத்திவிடும். அல்லது இந்த கீரையின் சாறினை, புண்களின் மீது தடவினாலும், புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கீரையை பயன்படுத்தலாம். காரணம், உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி, ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.. அதுமட்டுமல்ல, இந்த கீரையில் சூப் செய்து குடித்தாலும், எடை குறையும். அல்லது காசினி கீரையை உலர்த்தி பொடி செய்து, தினமும் இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டாலும் உடல் பருமன் குறையும்.

காசினி கீரையில் சட்னி செய்வார்கள்.. காசினி கீரையை நன்றாக அலசி, அதை விழுதுபோல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் இந்த விழுதை கொட்டி கொதிக்க விட வேண்டும்.

நன்றாக விழுது கொதித்ததும், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயத்தை நறுக்கி அதில் போட வேண்டும். சிறிது பூண்டையும் தட்டி அதில் போட வேண்டும். இவைகள் அனைத்துமே நன்றாக கொதித்து வந்ததும், சிறிது தேங்காயை அரைத்து கீரையில் கொட்டி இறக்கிவிட வேண்டும். மற்றொரு வாணலியில், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கீரையில் கொட்டினால், காசினி கீரை சட்னி ரெடி. இதை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்.
 

காசினிக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து பொரியலாகவும் மணப்பாகு செய்தும், சூப்பாகவும் செய்து உட்கொள்ளலாம். இதன் அதிக மருத்துவக் குணங்களின் காரணமாக கடவுளின் வரம் எனவும் இக்கீரை அழைக்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like