1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் 15 நிமிஷம் சூரிய ஒளியில் இருங்க, உங்க உடம்புல...

1

தினசரி ஐந்து நிமிடங்களாவது சூரிய வெப்பத்தில் நிற்பது நன்மை பயக்கும்.

இது நமது சருமத்தில் படும் போது உடலுக்கு வைட்டமின் டி இயற்கையாக கிடைக்கும். எனினும் பலருக்கும் இந்த வைட்டமின் டி என்பது பற்றாக்குறையாக உள்ளது. வைட்டமின் டி குறைபாடு பொதுவானதாக உள்ளது. இதை உணவு வழியாக பெறுவது சிரமம். இந்த சூரியகுளியல் மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறீத்து தெரிந்துகொள்வோம்.

உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்டிருப்பவர்கள் தினமும் 15 நிமிடங்களாவது சூரிய குளியல் மேற்கொள்வதன் முலம் இது சருமத்தின் மேல் அடுக்கில் நைட்ரிக் ஆக்ஸைட் படுவதன் மூலம் ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது என்கிறது ஆய்வுகள்.ரத்த ஓட்டத்தில் ஆக்சைட் செல்ல அனுமதிப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. தினசரி 15 நிமிட சூரிய குளியல் மூலம் இந்த நன்மையை நீங்கள் பெற்றுவிட முடியும்.

தூக்கமின்மை பிரச்சனையை கொண்டிருப்பவர்களாக இருந்தால் இந்த சூரியக்குளியல் இந்த பிரச்சனையை தீர்த்துவிடும். உடல் சோர்வு மந்தம் நீக்கி சுறுசுறுப்பாக ஆற்றலுடன் ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதோடு இரவில் ஆழ்ந்த உறக்கத்தையும் மேம்படுத்த செய்யும்.

சூரிய குளியல் உங்கள் தூக்க சுழற்சியை சீராக்கி இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கும்.

எலும்புகளை வலுவாக வைக்க வைட்டமின் டி தேவை. இது உடல் கால்சியம் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. இது வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கிறது. எலும்பு களை மென்மையாக்கும் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் கீல்வாதத்தை தடுக்க செய்கிறது.தினமும் 15 நிமிடங்கள் உடலில் சூரிய ஒளிபட்டால் அது எலும்புகளை வலுவாக்க செய்கிறது. இயற்கையான முறையில் எலும்புகளை வலுவாக்க சூரிய ஒளி பெரிதும் உதவும்.

வைட்டமின் டி - ந் சிறந்த ஆதாரமாக சூரிய ஒளி உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. அதற்காக கண்கள் நேரடியாக சூரிய ஒளியை பார்க்க வேண்டும் என்றில்லை. ஏனெனில் வெறும் கண்ணால் சூரிய ஒளியை பார்ப்பது கண்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.அதோடு அப்படி பார்க்கவும் முடியாது. சூரிய ஒளி உடலில் படும் போது தோல் வைட்டமின் டி உற்பத்தி செய்கிறது. அதன் வழியாகவே பார்வை வலுப்பெறுகிறது.

மனச்சோர்வு பிரச்சனைகளை குறைக்க சூரிய ஒளி உதவுகிறது. சூரிய ஒளி உடலில் படும் போது அது செரோடோனின் என்னும் ஹார்மோனின் வெளியீட்டை தூண்டுகிறது. இது மன நிலையை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தை குறைக்க செய்கிறது. மனச்சோர்வு இல்லாமல் இருக்க சூரிய ஒளி உதவுகிறது.சூரிய ஒளியின் கீழ் நிற்கும் போது அது நம்மை அமைதிப்படுத்தி அமைதியாக்கும். காலை நேர சூரியக்குளியல் நம்மை ஆற்றலுடன் ஆசுவாசத்துடன் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும்.

சூரிய ஒளி தோல் தடிப்பு, அழற்சி போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கிறது. சூரிய ஒளி உடலில் ரத்த வெள்ளை அணுக்களில் படும் போது அது தொற்றுகளை எதிர்த்து போராட செய்கிறது. இதன் வைட்டமின் டி உடல் நோய்க்கு எதிராக உதவுகிறது. தினசரி சூரிய ஒளியில் 15 நிமிடம் இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்சுலின் உற்பத்தியில் வைட்டமின் டி -யின் பங்கு அவசியம். இந்த வைட்டமின் டி குறைபாடு டைப்2 நீரிழிவு அபாயத்தை உண்டாக்க செய்யும். உடல் வைட்டமின் டி போதுமான அளவு கொண்டிருந்தால் இன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை உண்டாகாது.வைட்டமின் டி குறைபாடு அதிகரிக்கும் போது அது மார்பகம் மற்றூம் பெருங்குடல் புற்றூநோயை தூண்டும் அபாயத்தை கொண்டிருக்கலாம். இந்த குறைபாடு இல்லாமல் செய்ய உடலே இயற்கையாக வைட்டமின் சி உற்பத்தி செய்வதால் தினசரி சூரிய குளியல் உங்கள் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்க செய்யும்.

தோல் மருத்துவர்கள் சூரிய ஒளி சிக்கல் இல்லாதவரை ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் வரை சன்ஸ்க்ரீன் பயன்பாடு இல்லாமல் இருக்கலாம் என்கிறார்கள். அதே நேரம் அதிக நேரம் தொடர்ந்து சூரிய ஒளி படும்படி நிற்பதும் தீங்குவிளைவிக்கும் என்கிறது ஆராய்ச்சிகள். ஏனெனில் இது தோல் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்க செய்யும்.

சூரிய ஒளி குளியலுக்கு முன்பு சன்ஸ்க்ரீன் எஸ்பிஎஃப் அளவு 30 அல்லது அதற்கு மேற்பட்டதை 15 நிமிடங்களுக்கு முன்னதாக பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதேபோன்று தலையின் மேற்புறத்திலும் இந்த எஸ் பிஎஃப் பயன்படுத்துவது நல்லது.சன்பாத் எடுக்கும் போது அதிக வெயிலை உங்கள் உடல் உணர்ந்தால் நிழலில் இடைவெளி எடுத்துகொள்ளுங்கள். அதிக நேரம் இருப்பது போல் உணர்ந்தால் தண்ணீர் குடியுங்கள்.

சூரிய ஒளியை சூரியனின் உதய காலத்தில் பெறுவது நல்லது. அதே நேரம் நீங்கள் 15 நிமிடங்களுக்கு மேல் சன் பாத் பெற வெண்டாம். 

Trending News

Latest News

You May Like