1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கிட்னி ஸ்டோன் கரைய கைமேல் பலன் தரும் எளிய வைத்தியம்..!

1

 உடலில் இருக்கும் கழிவுகளை வெளியே அனுப்பும் போது உப்பும் வேதிப்பொருளும் அதிலிருந்து வெளியேறும்.

உப்பு முழுமையாக வெளியேறாமல் சிறு துகளாக மாறி சிறுநீரகத்தில் தேங்கிவிடும். இவை படிப்படியாக தேங்கி கற்களாக படிந்துவிடுகிறது. சிறு சிறு கற்களாக இருந்தால் அவை கரைந்து வெளியேஎறிவிடும். ஆனால் சமயங்களில் கல் பெரிதாக வளர்ந்து சிறுநீர்க்குழாயில் அடைக்கும். சிலருக்கு சிறுநீரகப்பையில் வந்து தங்கி பிரச்சனைகளை உண்டாக்கும். கல் பெரியதாக இருந்தாலோ, கடுமையான அறிகுறியை கொண்டிருந்தாலோ அதற்கு வீட்டு வைத்திய முறை தீர்வாகாது. ஆனால் ஆரம்ப கால அறிகுறியாக இருந்தால் வீட்டு வைத்தியம் மூலம் சிறுநீரகக்கல்லை கரைத்து வெளியேற்றலாம். 

சிறுநீரகக் கற்கள் உண்டாவதை அறிகுறிகள் மூலம் ஆரம்பத்தில் உணர்ந்த உடன் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும் என்பதுதான்.

கோடைக்காலமாக இருந்தால் தாகம் எடுக்கும் என்பதால் அதிகளவு நீர் குடித்துவிடமுடியும். ஆனால் மற்ற நேரங்களில் 4 லிட்டர் குடிப்பது சிரமம் என்று நினைத்தால் சிறுநீரகக்கல் கரைந்து வெளியேறுவதில் சிரமத்தையே சந்திப்பீர்கள். தண்ணீருக்கு மாற்றாக இளநீர் குடிப்பதும் நல்லது. வாரத்துக்கு மூன்று இளநீர் குடிக்கலாம். கோடைக்காலமாக இருந்தால் தினசரி ஒரு இளநீர் குடிக்கலாம். தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது சிறுநீரும் கூடுதலாக உப்புத்துகளோடு வெளியேறிவிடும். படிந்திருக்கும் உப்புத்துகள்கள் படிப்படியாக என்றாலும் கரைந்து வெளியேறக்கூடும்.

இவை சிறுநீரகக்கோளாறை நீக்கி சிறுநீரகத்தின் பணியையும் சிறப்பாக வைத்திருக்க உதவும். எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன் அளவு எனில் அதற்கு இருமடங்கு அளவு தேன் கலந்து வைக்கவும். இதில் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் , சாம்பார் அல்லது வெள்ளை வெங்காயத்தை நறுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து இடித்து சேர்க்கவும். பிறகு ஒரு டம்ளர் நீர் விட்டு கலக்கி குடிக்கவேண்டும்.

தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இதை பொறுமையாக ஒவ்வொரு சிப் குடித்து உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும் .எலுமிச்சையில் இருக்கும் சிட்ரேட் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் கால்சியம் படிவை உடைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை சாறை உட்கொண்டவர்களுக்கு சிறுநீரகக்கற்கள் கரைவது கண்டறியப்பட்டது.

ஆப்பிள் சீடர் வினிகர் அடிட்டிக் அமிலம் நிறைந்தவை. இவை சிறுநீரகக் கற்களை கரைக்க பெரிதும் உதவுகிறது. சிறுநீரகக்கற்களால் உண்டாகும் வலியைக் குறைக்கவும் இவை உதவும். ஆப்பிள் சீடர் வினிகர் 6 அவுன்ஸ் அளவு எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து நாள் முழுக்க வைத்திருந்து பருகலாம். கவனம் ஆப்பிள் சாறு 6 முதல் 8 அவுன்ஸ்க்கு மேல் குடிக்க கூடாது. அதே போன்று நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் அறிவுரையில்லாமல் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக இதை அடிக்கடியில்லாமல் வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தாலே சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கலாம். சிறுநீரகக்கற்கள் வந்த பிறகு வாழைத்தண்டை சாறாக்கி சிட்டிகை மிளகுத்தூள், உப்பு கலந்து குடித்துவருவதன் மூலம் சிறுநீரககல் கரையும். வாரத்துக்கு மூன்று நாள் மட்டும் எடுத்துகொள்ளவேண்டும். தொடர்ந்து எடுத்தால் உடல் பலவீனமாகிவிடவும் வாய்ப்புண்டு. வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியமும், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலமும் இணைந்து சிறுநீரகத்தில் இருக்கும் கால்சியம் கற்களை கரைக்க உதவும். வாழைத்தண்டுசாறு துவர்ப்பு நிறைந்ததால் அப்படியே குடிக்கமுடியாதவர்கள் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்ந்து குடிக்கலாம்.

வாழைத்தண்டு சாறை காட்டிலும் பன்மடங்கு பலன் தரக்கூடியது இது. வெட்டிய வாழைமரத்திலிருந்து வடியும் சாறை குடித்தால் பலன் விரைவில் கிடைக்கும். மூன்று நாட்களில் உடனடியாக பலன் கிடைக்கும்.

வாழை மரத்தை வெட்டிய பிறகு அடிமரத்தை உள்ளங்கை அளவு பள்ளமாக்கி அதை மேலாக்க துணிகொண்டு மூடவேண்டும். 8 மணி நேரம் கழித்து துணியை விலக்கினால் அந்த பள்ளத்தில் இலேசாக சாறு வடிந்திருக்கும். அதை குடித்து வந்தால் எப்பேர்பட்ட சிறுநீரக கல்லும் காணாமல் போகும். வெட்டிய வாழைமரத்திலிருந்து உடனடியாக எடுக்க வேண்டும். ஒரு நாள் மட்டுமே இதன் சாறு கிடைக்கும்.

துளசி சுவாச நோய்களை மட்டும் அல்லாமல் உடலில் கற்களை கரைக்கவும் பயன்படுகிறது. சிறுநீரகங்களில் இருக்கும் தாது உப்பு மற்றும் யூரிக் அமிலத்தை சமநிலையில் வைக்க துளசி உதவுகிறது. துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் தேன் சேர்த்து (பொறுமையாக) குடிக்க வேண்டும்.

துளசி இலை இல்லாதவர்கள் துளசி பொடியை வாங்கியும் தேனில் குழைத்து சாப்பிடலாம்.இவை சிறுநீரக கற்களை அகற்ற உதவும்.

உணவில் உப்பை குறைக்க வேண்டும். அதிக காரம், மசாலா. புளி உணவுகளை தவிர்க்க வேண்டும். கால்சியம் அதிகமிருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.யூரிக் அமிலம் அதிகமிருக்கும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சிட்ரேட் அளவையும் குறைக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவுகள், துரித உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட தயாரிப்புகள், காபி,டீ,சோடாபானங்கள், ஐஸ்க்ரீம் வகைகள், உலர்பருப்புகள், பீன்ஸ் வகையறாக்கள் தவிர்க்க வேண்டும்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், சிட்ரிக் அமிலம் நிறைந்த பழச்சாறுகள், மாதுளைபழச்சாறு (இவை சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க உதவும்)

சிறுநீரகக்கல் ஆரம்ப நிலையில் இருந்தால் மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றினாலே கல் கரைய தொடங்கும். கல் பெரியதாக இருந்தாலோ வலி கடுமையாக இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. சிறுநீரகக் கற்களை நீக்கினாலும் மீண்டும் வரக்கூடும் என்பதால் எப்போதும் உணவு பழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 

Trending News

Latest News

You May Like