1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

1

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக இந்த உணவுகள் சிறுநீர்ப்பெருக்கிகள் என்பதால், இவை உடலில் நீர்ப்பெருக்கத்தை அதிகரித்து, உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை சிறுநீரின் வழியே அவ்வப்போது வெளியேற்றும்.

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!! சரி, இப்போது உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

செலரி செலரி, உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுப் பொருட்களில் மிகவும் சிறப்பானது. இதில் நீர்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், இவை உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிப்பதோமுடு, செரிமானத்தையும் சீராக்கும். எனவே இதனை முடிந்தால் அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

எலுமிச்சை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்படும். மேலும் இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட உதவும்.

கிளைக் கோசுகள் முட்டைக்கோஸ் போன்று ஆனால் பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும் இந்த கிளைக் கோசுகள் சுவையில் சிறப்பானதாக இல்லாவிட்டாலும், இது எடையைக் குறைக்க நினைப்போருக்கு உதவும். அதுமட்டுமின்றி, இதில் கலோரிகள் குறைவு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

முட்டைக்கோஸ் முட்டைக்கோஸ் ஒரு நீர்ப்பெருக்கி உணவு. மேலும் இதில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. எனவே இதனை அன்றாட உணவில் சேர்த்து நன்மைகளைப் பெறுங்கள்.

பீட்ரூட் பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிமகம் உள்ளது. மேலும் இது சிறுநீர்ப் பெருக்கத்தைத் தூண்டும் உணவுப் பொருளும் கூட. அதிலும் இதில் பீட்டாலயின் என்னும் அரிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டைப் பெற, வேக வைத்து சாப்பிடாமல், சாலட் செய்து உட்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கிரான்பெர்ரி ஜூஸ் ஆராய்ச்சி ஒன்றில், சிறுநீரக பாதை தொற்று உள்ளவர்கள் கிரான்பெர்ரி ஜூஸ் குடிப்பது நல்லது என்று தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஜூஸ் உடலின் பொட்டாசிய அளவை சீராக பராமரித்து, உடலுக்கு அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை வழங்கி, ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் 90 சதவீதம் நீர்க்கத்து நிறைந்துள்ளதால், உடலை சுத்தப்படுத்த நினைப்பவர்கள், வெள்ளரிக்காயை அதிகம் உட்கொள்வது நல்லது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.

தக்காளி தக்காளியை அப்படியே உட்கொண்டால், அதன் முழுமையான பலனைப் பெறலாம். ஏனெனில் வேக வைக்காத தக்காளியில் தான் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

Trending News

Latest News

You May Like