1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ?அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து...

1

அன்னாசிப்பூ மசாலாக்களில் மட்டுமல்ல உணவுகள், பானங்கள், இனிப்புகள் புத்துணர்ச்சி தரக்கூடிய அனைத்திலும் இவை பயன்படுத்தப்படுகிறது. இது தவிர சோப்புகள், க்ரீம்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிலும் இதன் நறுமணத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.

அன்னாசிப்பூவில் இதன் விதைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றூம் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய பொருள்கள் உண்டு. இது காய்ச்சலுகு எதிராக சிகிச்சையளிக்க கூடும். அதோடு இது ஷிகிமிக் அமிலத்தின் நல்ல மூலமும் கூட. இது காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்தில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் காய்ச்சல் வைரஸ் எதிராக அன்னாசிப்பூ செயல்படுகிறது என்பதற்கான ஆய்வுகள் இல்லை.

அஜீரணக் கோளாறுகள், இதயம் பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி தொந்தரவு, உயர் ரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள்  பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்து.

தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை  தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது. 

அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, பெருங்காயம், பனைவெல்லம்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.
 

இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட  மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.

பிரியாணிக்கு மணம், சுவை கொடுப்பதில் இதற்கு நிகர் வேறில்லை. அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

இந்த எண்ணெய் சரும அழற்சி அனைத்தையும் தீர்க்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் உதவும். இதில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் மற்றும் லிமோனின் உள்ளன.

இப்பூவை பொடி செய்து ½ முதல் 1 கிராம் எடை வீதம் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை உட்கொள்ள, செரியாமை, மாந்தம், புளித்த ஏப்பம் நீங்கும்.

அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகும். இந்த தைலத்தை நெற்றியில் தடவினால் மன இறுக்கத்தை போக்கும்.

குழந்தைகளுக்கு இதை தேநீர் போன்று காய்ச்சி வழங்குவதால் வாந்தி, வலிப்புத் தாக்கங்கள், பிற நரம்பியல் விளைவுகளை குணப்படுத்தும்.

வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான சிகிமிக் அமிலம் அன்னாசிப் பூவில் உள்ளது. இது 'ஆசெல்டாமிவிர்' (டாமிபுளூ) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பன்றி காய்ச்சலுக்கு தரப்படுகிறது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாகும். இது இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது, திசுக்களில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றுகிறது.

Trending News

Latest News

You May Like