1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வர..

1

அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூச்சுப்பிடிப்பு:
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சருமநோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வாழைப்பழம்:
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

முகம் வழுவழுப்பாக இருக்க:
கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:
தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

குழந்தைகளுக்கு:
குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

வயிற்று நோய் குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக: 
வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

மலச்சிக்கல் தீர:
பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:
நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

இரத்தம் உறைதல் குணமாக:
 நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக:
 கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

தலைவலி குணமாக:
குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

கண்வலி வராமல் தடுக்க:
எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

குடல்புண் குணமாக:
மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

கால்பித்த வெடிப்பு:
 அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

முடிவளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

கருப்பு முடியாக மாற்ற:
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:
 ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

கண்கள் குளிர்ச்சி:
கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

வாய் நாற்றம் போக:
நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

வரட்டு இருமல் தனிய:
எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

Trending News

Latest News

You May Like