இது தெரியுமா ? முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து...
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.
முட்டைகோஸில் அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேகவைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும்போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.
எடையை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்கள் விதவிதமாக முட்டைகோஸை வைத்து ரெசிபிகளை தயார் செய்து சாப்பிடலாம்.நீரில் கரையும் வைட்டமின்கள் முட்டைகோஸில் உண்டு. அதோடு கொலாஜன் உற்பத்தியையும் தூண்டக் கூடியது. இவை நம்முடைய உடலின் எலும்பு, தசைகள் மற்றும் ரத்தக் குழாய்களை வலிமையாக்குகின்றன.
முட்டைகோஸில் உள்ள போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
இதில் கலோரி அளவு மிகக் குறைவு. அதேசமயம் கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி எடையை குறைக்க செய்யும்.
எடையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்டீம் செய்து அல்லது சூப் வடிவில் எடுத்துக் கொள்வது நல்லது.உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் தொடர்ச்சியாக தங்களுடைய டயட்டில் முட்டைகோஸை சேர்த்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.