1. Home
 2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வாரம் ஒருமுறை வாத நாராயணன் கீரையை பருப்பு கலந்து சாப்பிட்டு வந்தால்...

1

வாத நாராயணன் என்பது மரம் போன்று வளரக்கூடியது. பார்க்க புளிய மரத்தின் இலைகளை போன்று இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வாத நோய்கள் அண்டாமல் இருக்க வாரந்தோறும் இதன் இலைகளை கீரை போன்று சமைத்து சாப்பிட்டார்கள். வாத நோய்களை போக்குவதாலேயே இதற்கு வாதநாராயணன் என்னும் பெயரை கொண்டதாக சொல்வார்கள். 

முடக்குவாத நோய்களை தீர்க்க அந்த காலத்தில் கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை தான் பயன்படுத்திவந்தார்கள். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு கை, கால், விரல்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். இதனால் கை, கால் அசைக்க முடியாமல் முடக்கிவிடும். இவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும்.

இவர்கள் வாத இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம். காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும். வாத இலையை நீரில் ஊறவைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றிவந்தால் குடைச்சல் குறையும்.

மூளைக்குள் போதுமான அளவு ஆக்சிஜன் செல்லாமல் இருக்கும் போது, ரத்தக் கட்டு ஏற்படும் போது பக்கவாதத்தை சந்திக்க கூடும். பக்கவாதம் வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை உணர்த்தும். வலது மூளை, இடது மூளை செயல்பாட்டில் உண்டு. உடலின் வலது பக்கம் செயல்படாமல் இருந்தால் இடது மூளை செயல்படாது. இடது பக்கம் செயல்படவில்லை என்றால் வலது மூளை செயல்படாமல் இருக்கும். இதனால் பாதிக்கப்படும் உடல் பகுதியானது கை, கால்,முகத்தில் ஒரு பகுதி செயல் இழப்பது போன்ற அறிகுறிகளை உணர முடியும். சிலருக்கு பேசும் போது வார்த்தை தெளிவான உச்சரிப்பின்றி குழறவும் கூடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வாத நாராயாணன் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொள்ள வேண்டும்.

தினமும் இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் வெந்நீரில் அரை டீஸ்பூன் அளவு வாதநாராயணன் பொடியை கலந்து குடித்து வர வேண்டும். அறிகுறி மறைய தொடங்கினாலும் மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்வதன் மூலம் பக்கவாதம் வராமல் தடுக்கமுடியும்.

உடலில் மூட்டுகளிலும் ஆங்காங்கே தேங்கியிருக்கும் வாத நீர் அதிகமானால் மூட்டுகளில் வீக்கம் இருக்கும். கை, கால் குடைச்சல் அதிகமாக இருக்கும். இதை போக்க வாத நாராயணன் இலையை உளுந்து சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் வாத நீர் மலத்தில் வெளியேறி விடும்.

உடலில் இருக்கும் வாதத்தை அவ்வபோது வெளியேற்ற மாதம் ஒருமுறை வாதநாராயணன் இலை பொடி ஒரு டீஸ்பூன் எடுத்துகொண்டு,மூக்கிரட்டை வேர் பொடி கால் டீஸ்பூன் எடுத்துகொண்டு, அதனுடன் அரை டீஸ்புன் அளவு விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து இலேசாக சூடுபடுத்தவும். இதை அரை டீ ஸ்பூன் அளவு உள்ளுக்கு எடுத்துகொண்டால் மறுநாள் மலத்தில் வாதம் வெளியேறும். ஆரம்பத்தில் இதை சாப்பிடும் போது இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு உண்டாகும். இவை வாதத்தை வெளியேற்றிவிடும். இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது எடுத்துகொள்வது நல்லது.

நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் பக்கவிளைவில்லாமல் பொறுமையாக குணமாக வாதநாராயணன் தைலத்தை காய்ச்சி தினமும் குடித்துவரலாம்.

வாத இலையை அரைத்து அதன் சாறை எடுக்கவும். சாறின் அளவுக்கேற்ப சம அளவு விளக்கெண்ணெய் எடுத்து கொள்ளவும். அரை லிட்டர் அளவு இருந்தால் சுக்கு, மிளகு, திப்பிலி, வெண்கடுகு - தலா 25 கிராம் எடுத்து வாத நாராயணன் இலை சாறு கொண்டு மைய அரைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.

இவை அனைத்தும் சேர்ந்து மெழுகுப் பதத்துக்கு வரும் போது இறக்கி ஆறவைத்து வடிகட்டி வைக்கவும். தினமும் காலை வேளையில் 5 மில்லி அளவு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத்தளர்ச்சி கட்டுப்படும்.அதோடு கீல்வாதம், பக்கவாதம், மூட்டு விக்கம், குதிகால் வலி போன்ற நோய்களும் கட்டுப்படும்.

வாத நாராயணன் இலை கிடைத்தால் இதையும் செய்யலாம். உடல் வலி , உடல் சோர்வு இருந்தால் வாதநாராயணன் இலையை நீரில் கொதிக்க வைத்து உடலில் ஊற்றி குளிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வாத நாராயணன் கீரையை பருப்பு கலந்து சேர்த்து சாப்பிட்டு வந்தாலே நரம்புகள் பலப்படும். ரத்த ஓட்டமும் சீர்படும். முட்டிகளில் வலி வீக்கம் உண்டாகாது.

மூட்டுகளில் நாள்பட்ட வீக்கம் இருந்தால் வாதநாராயணன் இலைகளுடன் சிறிதளவு அரிசி தவிடு விளக்கெண்ணெய் சில துளிகள் விட்டு நன்றாக வதக்கி மெல்லிய துணியில் போட்டு பந்து போல் சுருட்டி முடித்து வீக்கம் இருக்கும் பகுதியில் ஒற்றடம் கொடுத்து வரலாம். இதனால் எப்பேர்பட்ட வீக்கமும் குணமாகும். வாத நாராயணன் கீரை கிடைக்காவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் வாத நாராயணன் தைலம் கிடைக்கும். அதையும் மேற்பூச்சாக பூசலாம். பலன் கிடைக்கும்.

பொதுவான பயன்கள்:

 • வாத நோய்களை குறைக்க உதவுகிறது: வாதநாராயணன் கீரை என்ற பெயரே அதன் முக்கிய பயனை சுட்டிக்காட்டுகிறது. வாதம் எனப்படும் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க இது பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
 • மூட்டு வலி மற்றும் இடுப்பு வலியைக் குறைக்கிறது: வாதநாராயணன் கீரையில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலி மற்றும் இடுப்பு வலியைக் குறைக்க உதவும்.
 • செரிமானத்தை மேம்படுத்துகிறது: இந்த கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
 • வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது: வாதநாராயணன் கீரையின் இலைச் சாறு வயிற்றுப் புண்களை ஆற்றும் திறன் கொண்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • ரத்த சோகையை எதிர்த்துப் போராடுகிறது: இரும்புச்சத்து மற்றும்葉酸 நிறைந்த வாதநாராயணன் கீரை ரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வாதநாராயணன் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
 • முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வாதநாராயணன் கீரையில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் பொடுகுத் தொல்லையைக் குறைக்கிறது.
 • தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாதநாராயணன் கீரை தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயதான தோற்றத்தைத் தாமதப்படுத்தவும் உதவுகிறது.

குறிப்பிட்ட பயன்கள்:

 • மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கிறது: வாதநாராயணன் கீரை இலைச் சாறு மாதவிடாய் அறிகுறிகளான வெப்பநிலை, வலி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வாதநாராயணன் கீரையில் உள்ள葉酸 கர்ப்ப காலத்தில் குழந்தையின் நரம்பு குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
 • சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது: வாதநாராயணன் கீரையின் இலைச் சாறு சிறுநீரக கற்களை கரைக்க உதவும் என்று பாரம்பரிய மருத்துவத்தில் நம்பப்படுகிறது.

Trending News

Latest News

You May Like