இது தெரியுமா ? காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பழைய சோறு..!
அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம்.
வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும்.காலையில் கழிவறயில் மல்லு கட்ட வேண்டாம்.
இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பண்றி காய்ச்சல் உட்பட. காலை உணவாக பழைய சாத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தன்னிர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும்அதுமில்லாமல் இதில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கல் இல்லமல் காலையில் ஃபிரியா போலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்குஅதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது. அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குண்மாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராம்ல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.அதனாலதான் நம்ம ஆளுங்க ஒரு சட்டி பழைய சாதம் சாப்பிட்டு விட்டு மாலை வரை வயலில் வேலை செய்யமுடிந்திருகிறது போலும். காலையில் சாண்ட்விச், பீட்ஸா, பர்கர் என கழித்து திரியும் தமிழ் மக்களே இன்றிலிருந்து பழைய சோறு சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.
பொங்குன சோத்துல தண்னிய ஊத்திட்டு அடுத்த நாள்கலைல திறந்து பாருங்க கம கம என பழைய சோறு தயார்.
இதற்கு கைகுத்தல் அரிசி சிறந்தது. சூடான சாததில் தண்னிர் ஊற்ற கூடாது. ஆறிய பின்பு மண்டட்டியில் போட்டு தண்னிர் ஊற்றி மறு நாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் ஜில்லென்றுஇருக்கும். மதியம் வரை பசிக்காதாம்
சீனாவிலும் பாரம்பரிய சாப்பாடு என்றால், அது இந்த பழைய சோறுதானாம்.. நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில்கூட, இதுபாரம்பர்யம் மிக்க உணவாக விளங்குகிறது. அவ்வளவு ஏன், உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. உண்மையை சொல்லப்போனால், சாதத்தை விட, இந்த தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. வழக்கமாக சாதத்தில் உள்ள இரும்பு சத்தைவிட, 21 மடங்கு இரும்புச்சத்து இந்த நீராகாரத்தில் உள்ளதாம். உடலில் எதிர்ப்பு சத்துக்களை அதிகரிக்க செய்வதால்தான், இதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், அலர்ஜியை போக்குகிறது. வயதான தோற்றத்தை தள்ளி போட செய்து, இளமையை தருகிறது. இந்த நீரை மட்டுமே, தலைக்கு கண்டிஷ்னராக பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி உறுதியாகவும் பளபளப்பாகவும் மாறுவதுடன், முடி உதிர்வதும் தடுத்து நிறுத்தப்படுகிறது. பழைய சோறு சாப்பிடுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராதாம். மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும். ஆனால், பழைய சாதமாக நமக்கு கிடைக்க வேண்டுமானால், தண்ணீர் ஊற்றி 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியமாம்..