1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ?வாழைத்தண்டு ஜூஸ் குடிச்சா... கிட்னி ஸ்டோன் மட்டுமில்ல இந்த 8 நோயும் பறந்துடும்..!

1

வாழைத்தண்டில் கலோரிகள் மிக மிகக் குறைவு. ஆனால் வைட்டமின்களும் மினரல்களும் அதிகம். அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்க்கும்போது கீழ்வரும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

வைட்டமின் பி6,
வைட்டமின் சி,
பொட்டாசியம்,
மக்னீசியம்,
காப்பர்,
இரும்புச்சத்து,
மாங்கனீசு,
கார்போஹைட்ரேட்,
நார்ச்சத்துக்கள்,
நுணணூட்டச்சத்துக்கள், நிறைந்திருக்கின்றன.

வாழைத்தண்டுகளில் போதிய அளவு வைட்டமின் பி6 உள்ளது. இது உடலின் பல்வேறு செயல்பாடுகளை மாற்றியமைத்து, உடல் இயக்கத்தில் எதிர்வினைகள் ஏற்படுவதை தடுக்கிறது.


வைட்டமின் பி6 குறைபாட்டால் மனச்சோர்வு, புற்றுநோய் செல்கள் வளர்ச்சி, பார்கின்சன் நோய் உள்ளிட்டவை உண்டாகும். அதேபோல வைட்டமின் பி6 குறைபாட்டால் நீரிழிவு உண்டாகும் என்றும் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைத்தண்டு ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதோடு, இன்சுலின் உற்பத்தியையும் தூண்டுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகிற ஹைபர் கிளைசீமியாவையும் தடுக்க வாழைத்தண்டில் உள்ள லெக்டின் பயன்படுகிறது. இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தினமும் கூட இந்த வாழைத்தண்டு ஜூஸை எடுத்துக் கொள்ளலாம்.

உடலில் கழிவுகள் சேரும்போது தான் நிறைய பிரச்சினைகளும் வருகின்றன. அதனால் குறிப்பிட்ட இடைவெளிகளில் பேதி போன்றவை கொடுத்து குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.ஆனால் உடலில் கழிவுகள் சேராமலே, தினமும் சுத்தம் செய்து கொள்வது தான் இன்னும் சிறந்தது. அதற்கு வாழைத்தண்டு உங்களுக்கு உதவி செய்யும்.

வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கும்போது குடலில் உள்ள அமிலத்தன்மை சீராகும். ஜீரண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.இதனால் நெஞ்செரிச்சல், வயிறு அசௌகரியம் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும். வாரத்திற்கு மூன்று நாட்களாவது காலை வெறம் வயிற்றில் இந்த வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறும்.உடல் எடையைக் குறையை எவ்வளவோ கடினமான டயட்டுகளைப் பின்பற்றி இருப்பீர்கள். ஆனால் ஆரோக்கியமான முறையில் எளிமையாக உடல் எடையைக் குறைக்க நீங்கள் இந்த வாழைத்தண்டு ஜூஸை குடிக்கலாம்.வாழைத்தண்டில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் பசியைக் கட்டுப்படுத்தி, அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தடுக்கும். அடிவயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையை நன்றாகவே குறைக்கும்.

சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே டயட்டில் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.இதிலுள்ள டையூரிடிக் பண்புகள் சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகக குழாய் தொற்று பிரச்சினை உள்ளவர்களும் இந்த வாழைத்தண்டை சாறை எடுத்துக் கொள்ளலாம்.அப்படியே குடிக்க பிடிக்காதவர்கள் அதோடு ஏலககாய் 1 சேர்த்தோ அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தோ குடிக்கலாம்.

அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு மிகச்சிறந்த தீர்வு என்று சொல்லலலாம்.வாழைத்தண்டு சாறிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் குடல் என்சைம்களைத் தூண்டிஈ மலக்கட்டை சரிசெய்து, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.

 உலகளவில் இஸ்கிமிக் இதய நோய் போன்றவை உண்டாவதற்கான காரணங்களில் கொலஸ்டிரால் பிரச்சினை தான் முதன்மையாக இருக்கிறது.
இந்த கெட்ட கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துவதிலும் வாழைத்தண்டு மிகச்சிறப்பாகச் செயல்படும். இதிலுள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி5 ஹீமோகுளோபினை அதிகரிப்பதன் மூலம் எல்டிஎல் கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க முடியும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை முறையாகக் கட்டுப்படுத்தாமல் போகும்போது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்துகள் அதிகரிக்கும். இவற்றைக் குறைத்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வாழைத்தண்டு ஜூஸை குடிக்கலாம்.இதிலுள்ள பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சீராக்கும். இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். இதய நோய் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

Trending News

Latest News

You May Like