1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? 'நூடுல்ஸ் மசாலா' வீட்டிலேயே செய்யலாம்..!

1

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 200 கிராம்

காய்கறிகள் - வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப)

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுந்து - 1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 தண்டு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

காய்கறி சூப் பவுடர் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை:


முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அதில் உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வேக வைக்கவும். நூடுல்ஸ் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் அதை அலசி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கங்கள். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். 


காய்கறிகள் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் உப்பு சேர்த்து கலக்குங்கள். இப்போது சோயா சாஸ், தக்காளி சாஸ், வினிகர், காய்கறி சூப் பவுடர் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி, வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறி விடவும். 


இறுதியில் கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்தால் சூப்பரான சுவையில் நூடுல்ஸ் மசாலா தயார். 

Trending News

Latest News

You May Like