இது தெரியுமா ? நேந்திரன் வாழைப்பழத்தில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்குதாம்..!
நேந்திரன் பழம் ஏத்தன் பழம், ஏத்தம் பலம், நேந்திரம் பழம், சங்கலிகோடன் எனவும் அழைக்கப்படுகிறது. கேரளாவில் இது எல்லோராலும் மிகவும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழம். கேரளாவில் உள்ள முக்கிய உணவு என்றே இதை சொல்லலாம். கேரளாவில் நேந்திரன் பழத்தை வைத்து வாழைப்பழ அப்பம் செய்வார்கள். இதை பழம்பொரி என சொல்வார்கள். இது சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். நன்கு பழுத்து கனிந்த நேந்திரன் வாழை பழத்தை மைதா மாவில் நன்றாக முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்துக் கொடுப்பார்கள்.
சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். நன்கு கனிந்த வாழைப்பழம் மட்டுமே சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதுபோல நன்கு விளைந்து முற்றிய பழுக்காத நேந்திரன் வாழைப்பழத்தைக் கொண்டு வாழைப்பழ சிப்ஸ் தயாரித்து கொடுப்பார்கள் இதுவும் கேரளாவில் மிகவும் பிரதான உணவு பண்டம். நேந்திரன் வாழை பழத்தை தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள். இது குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தெம்பையும் கொடுக்கும் என சொல்வார்கள். அதுபோல கேரளாவில் எல்லா காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் அவியல் எனப்படும் ஒரு கூட்டுப் பதார்த்தத்தில் இந்த நேந்திரன் வாழைக்காயைப் போட்டு செய்வார்கள்.
தேங்காய் சேர்த்து காய்கறிகளோடு இந்த வாழைக்காயை சேர்த்து செய்யப்படக்கூடிய அவியல் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். கேரளாவில் உள்ள திருமண வீடுகளில் இந்த கூட்டு மிகவும் பிரபலம். இந்த நேந்திரன் பழம் காச நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது. காச நோய் குணமடைவதற்கு ஒரு நேந்திரம்பழம் ஒரு முட்டை இவை இரண்டையும் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகி உடல் ஆரோக்கியமாகும். ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க நேந்திரம் பழத்தை கொடுக்கலாம்.
நன்றாக பழுத்த நேந்திரம் பழத்தை நறுக்கி அதோடு சிறிது உப்பை போட்டு நன்றாக வேகவைத்து அதை பிசைந்து ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். இப்படி கொடுத்து வரும் பொழுது அவர்களுடைய உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைத்து குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு தொடர் இருமல் வந்து மிகப்பெரிய தொல்லையை உண்டுபண்ணும். இப்படிப்பட்டவர்கள் நன்றாக பழுத்த நேந்திரம் பழத்துடன் கால் டீஸ்பூன் மிளகு பொடியை கலந்து தினம்தோறும் மூன்றுவேளை சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய தொடர் இருமல் குணமாகும்.
ஒரு சிலர் என்ன சாப்பிட்டாலும் மிகவும் மெலிந்து ஒல்லியாக காட்சியளிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறு துண்டுகளாக்கி இட்லி வேகவைப்பது போல வேகவைத்து அதனுடன் நெய் கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக கொடுத்து வந்தால் உடல் மெலிந்தவர்கள் உடல் நல்ல புஷ்டியாக மாறும். நேந்திரம் பழம் இதயத்தை வலிமை பெற செய்கிறது. தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராது. இதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான சத்துக்கள் நேந்திரம் பழத்தில் அதிகம் உள்ளது. ஆகையால் உங்களுடைய இதயம் ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வாருங்கள்.
நேந்திரம் பழம் மூளையை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது. தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செல்கள் பலமடைந்து நினைவாற்றல் பெருகும். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய நினைவு திறன் அதிகரித்து மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வரும் பொழுது அது இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. உடல் பலவீனமாக இருப்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் நேந்திரம் பழத்தை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய உடல் ஆரோக்கியம் அடைய தொடங்கும். நேந்திரம் பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சருமம் அழகாக பளபளப்பாக மினுமினுக்க தொடங்கும்.
நேந்திரம்பழம் நம்முடைய உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தை அதிகம் கொண்டுள்ளது. உடல் அழகாக பளபளப்பாக மாற வேண்டும் என நினைப்பவர்கள் தொடர்ந்து நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வாருங்கள். நேந்திரம் பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதிகம் உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய உடல் கட்டுடன் காட்சியளிக்கும். நம்முடைய உடலில் உள்ள சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியடைய செய்யக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நேந்திரம் பழத்தில் நிறைந்துள்ளது.
தொடர்ந்து தினமும் நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருக்காது. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும். நேந்திரம் பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கவும் நேந்திரன் பழம் சிறந்தது. நேந்திரன் வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. நேந்திரன் பழம் செரிமானத்திற்கு நல்லது.
மலச்சிக்கலை குறைக்கும் தன்மை கொண்டது. நேந்திரம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது குடல் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த சோகை, சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம். தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வரும் பொழுது அது கண்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. வலுவான எலும்புகளுக்கு உறுதுணையாக இருக்கிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகளை குறைக்க நேந்திரம் வாழைப்பழம் உதவுகிறது.