1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? உடலுக்கு அழகும், சத்தும் கொடுக்கும் பாசிப் பருப்பு..!

1

 எல்லா அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியும். ஏனெனில் ஒவ்வொரு குழந்தைக்கும் சுவையைப் பழக்குவது அம்மாக்கள் தான்.  குழந்தையில் அவர்கள் விரும்பிய சுவைதான் வளரும் போதும் தொடர்கிறது.  அதனால் வளரும்போதே அனைத்து சுவைகளையும் பழக்குவது அம்மாக்களின் கைப்பக்குவத்தில்தான் உள்ளது. முன்பெல்லாம் பெரியவர்கள் கொடுக்கும்  தின்பண்டங்களையும், உணவுகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். இப்போதைய கட்டத்தில் உணவையும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களையும் தேர்வு செய்யும் விருப்பம் குழந்தைகளிடம் தான் இருக்கிறது. கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் கலர் கலர் பேப்பரில் இருக்கும் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை விட நம் கைப்பக்குவத்தில் அன்புடன் தயாரிக்கப்படும் உணவுக்கு ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு. தினம் ஒரு சுவை என்று மாறுபட்ட உணவு வகைகளை செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். உடலுக்கு போஷாக்கு தரும் தின்பண்டங்களை அவ்வப்போது செய்யும் விதமாக மூலப்பொருள்களைத் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். அப்படி ஒரு சத்தான உருண்டையை பற்றி பார்க்கலாம்.

பாசிப்பயறு.. உடலுக்கும் அழகுக்கும் சத்து கொடுப்பது . இவற்றை முளைகட்டி குழம்பு வைக்கலாம். பயறு இனிப்பு உருண்டை செய்யலாம். பாசிப்பருப்பு லாடு செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தேவை:

பாசிப்பருப்பு -  1 கிலோ

நாட்டுச்சர்க்கரை - முக்கால் கிலோ

ஏலத்தூள்- 5 டீஸ்பூன்.

நெய்- தேவைக்கு.

செய்முறை:

முழுபாசிப்பயறை சுத்தம் செய்து இலேசாக வறுத்து எடுக்கவும். மிக்ஸியில் அல்லது மிஷினில் முழுப் பாசிப்பயறையும் நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் ஏலத்தூள் சேர்த்து சிட்டிகை உப்பு கலந்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். வாரம் ஒரு முறை அல்லது குழந்தைகள் விரும்பும் போது.. நெய்யை சூடேற்றி மாவில் ஊற்றி உருண்டையாக பிடித்து வைக்கவும். மாவில் சிட்டிகை உப்பு கலந்து வைத்தால் ஆறுமாதங்கள் ஆனாலும்  மாவு கெடாமல் இருக்கும். அதிக சத்துக்களைக் கொண்ட பாசிப்பயறு லாடு நிச்சயம் குழந்தைகளுக்கு பிடித்த சத்தான உணவாக இருக்கும். எளிமையாக செய்யக்கூடிய சுவையான லாடு இது. செய்து பாருங்கள். சுவையில் நீங்களும் மயங்குவீர்கள். 

Trending News

Latest News

You May Like