1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சிறிது நெய் கலந்து முடியின் வேர்க்கால்கள் வரை தடவி வந்தால்...

1

ஆரோக்யமான கூந்தலை வளர்ப்பது ஒரு கலை. கூந்தல் வளர வேண்டும். கூந்தல் உதிராமல் இருக்க வேண்டும். பொடுகு தொல்லை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூந்தல் பளபளப்பு குறையாமல் இருக்க வேண்டுமானால் கூந்தலை வறண்டு விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆக இவற்றில் ஒன்றிலும் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எல்லா பெண்களின் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் ஒரே நேரங்களில் அத்தனையும் பராமரிப்பது சற்றே கடினம் என்றாலும் ஆரோக்யமான கூந்தலுக்கு இவையெல்லாம் அவசியமே.

கூந்தல் வளர பராமரிக்கும் முறைகளைத் தாண்டி முக்கியமாக கவனிக்க வேண்டியது வறண்ட கூந்தலை சரி செய்வது தான். முதலில் உங்கள் கூந்தல் என்ன வகை என்று தெரிந்து கொள்ளுங்கள். கூந்தலில் எண்ணெய் பிசுக்குடன் இருந்தால் அது எண்ணெய் பசை நிறைந்த கூந்தல். கூந்தலின் வேர்ப்பகுதியும் முடியும் வறண்டிருந்தால் அது வறண்ட கூந்தல் என்று சொல்லலாம். கூந்தலின் வேர்ப் பகுதி எண்ணெயுடனும் முடி வறண்டும் காணப்பட்டால் இது வறட்சியும் எண்ணெயும் கலந்த கூந்தல் இது.

தலைமுடியை எப்படி வாரினாலும் படியாமல் இருக்கும். நேரடியாக சூரிய ஒளி பட்டாலும், க்ளோரின் சேர்க்கப்பட்ட தண்ணீரினாலும், கூந்தலை ஸ்ட்ரெய்னிங் பண்ணுவதாலும், தரமற்ற சீப்புகளை உபயோகத்திலும் கூந்தல் வறண்டு விடுவதற்கு வாய்ப்பு உண்டு. வறண்ட கூந்தலை உடையவர்கள் பராமரிக்கா விட்டால் கூந்தல் நாளடைவில் சிக்குண்டு உடைய தொடங்கும். பொலிவை இழந்து வறட்சியை அதிகரிக்கும். அதனால் முதலில் வறண்ட கூந்தலை சரி செய்ய வேண்டும் .

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் உடன் சிறிது பசு நெய் கலந்து முடியின் வேர்க்கால்கள் வரை தடவி நன்றாக மசாஜ் செய்து அரைமணி நேரம் கழித்து இராசயனம் அதிகமில்லாத ஷாம்புகளைக் கொண்டு அலச வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தாலே நாளடைவில் கூந்தலின் வறட்சி குறைவதைக் காணலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக்கருவை தலைக்கு தேய்த்து குளிப்போம். ஆனால் வறண்ட கூந்தலுக்கு முட்டையின் மஞ்சள் கருவை தடவி குளிப்பது நல்லது.

அன்றாடம் கூந்தலுக்கு எண்ணெய் வைத்தால் கூந்தலின் வறட்சி மறையும் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் போதும் வறண்ட கூந்தல் பொலிவு பெறும். மயிர்க்கால்களில் இயற்கையான எண்ணெய் சுரக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் நிறைந்த பால் பொருள்கள், பருப்புவகைகள், முட்டை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

கூந்தல் பராமரிப்பில் முதன்மை பராமரிப்பான வறண்ட கூந்தலை சரி செய்தால் கூந்தல் வளர்ச்சியில் 80 சதவீத குறைகள் நீங்கும்.

Trending News

Latest News

You May Like