1. Home
 2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நோயில்லாமல் வாழவும்.. நோய் வந்தவர்களுக்கும் மிகச் சிறந்த உணவு இது..!

1

வெள்ளை இட்லியை பல்லு போன பாட்டியும். பொக்கைவாய் குழந்தையும் சேதாரமில்லாம சாப்பிடலாம்னா பாத்துக்கங்க...இது உருவான இடம் இதுதான்னு உறுதியா சொல்ல முடியல. ... இந்தோனேஷியாவில இதை கெட்லின்னு சொல்றாங்க.. நம்ம ஆளுங்க இட்டு +அவி= இட்லின்னு சொல்றோம்னு சொல்றாங்க..சரி அப்படிஎன்ன இருக்கு இட்லில....

அரிசியும் உளுந்தும் கலந்த சாதாரண மாவுதான். ஆனா அசாதாரண பலன் இதில் இருக்கும். இங்கிலாந்தில் தேசிய உணவு திட்டத்தின் கீழ் நம் பாரம்பரிய உணவு வகைகளான இட்லியும் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இட்லியின் பயனை தெரிந்து கொள்ளலாம். நோயில்லாமல் வாழவும்.. நோய் வந்தவர்களுக்கும் மிகச் சிறந்த உணவு என்னும் பட்டியலில் ஆண்டாண்டு காலம் இட்லி முதலிடத்திலலேயே இருந்து வருகிறது. இட்லிக்கு சீஸனே கிடையாது.  வருடம் முழுவதும் இட்லியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். உடலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எளிதில் செரிமானம் ஆவதில் இட்லி முதலிடத்தில் உள்ளது. ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவு. மேலும் நீராவியில் வேகவைக்கும் இட்லியில் வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருள்கள் வீணாவதில்லை என்பதால் இதற்கு மவுசு அதிகம்.

வெளிநாட்டவர்கள் இங்கு வரும்போது இட்லியின் தீவிர ரசிகர்களாக மாறுகின்றனர். இட்லியில் சேர்க்கப்படும் பொருள்களும், செய்யும் முறையும் ஒன்றுதான். வடிவத்தில் மட்டும் வேறுபாடு கொண்டு ஊருக்கு ஊர் இட்லியின் பெயரில் மாற்றம் உண்டு. குஜராத்தில் டோக்ளா, கேரளாவில் வட்டப்பம், மங்களூரில் சன்னாஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய பட்டியலே உண்டு. காஞ்சிபுரம் இட்லி, மல்லி இட்லி, காய்கறி இட்லி,  ரவா இட்லி, சில்லி இட்லி, தாளிப்பு இட்லி, இனிப்பு இட்லி என்று வலம்வருகிறது. இட்லி தினம் கொண்டாடப்படுவதன் மூலம் இட்லி மேலும் சிறப்பு பெறுகிறது.

இட்லியை மட்டும் சாப்பிட்டால் சுவையின்றி வெறுமையாக இருக்கும் என்பதால் இதற்கு தொட்டுக்கொள்ள இட்லிபொடி, சட்னி, துவையல் வகை, இட்லிக்கு ஏற்ற சாம்பார் போன்றவை இட்லியுடன் ஜோடி சேருகின்றன. இட்லி ஏன் அவ்வளவு நல்லது என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்கள். உளுந்து பயறு வகையைச் சேர்ந்தது. அரிசி தானிய வகையைச் சேர்ந்தது. இவை இரண்டும் இணைந்து  ஒன்றாக உட்கொள்ளும்போது உடலுக்கு தேவையான புரதம் சமநிலையில் கிடைக்கிறது. அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் சமமாக கிடைக்கிறது.

நோயில்லாமல் வாழவும்.. நோய் வந்தவர்களுக்கும் மிகச் சிறந்த உணவு இது

இட்லி மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் அவை இட்லியாக  எடுக்கப்படும் போது தான். மாறாக ஃப்ரைடு இட்லி, சில்லி இட்லி, நெய் தடவிய இட்லி என்று எண்ணெயில் பொறித்து சாப்பிடும்போது கலோரிகளின் அளவு அதிகமாகிவிடும். இன்னும் சிலர் இட்லியுடன் வடையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இதுவும் தவறானது. இட்லி தட்டில் வெள்ளைத் துணியை விரித்து ஆவியில் வேகவைத்து சாப்பிடுங்கள். இட்லி இட்லிதான்...

இட்லி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

 • நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது.
 • நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது.
 • மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.
 • வாய்வுக்கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது.
 • நமது வயிற்றில் உள்ள புண்கள் சரிசெய்யும் மற்றும் நன்கு செரிமான ஆக இட்லி பெரிதும் உதவுகிறது.
 • இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு இட்லி கொடுப்பது நல்லது.   
 • வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
 • சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.
 • முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.
 • அரிசியினால் உடல் பருமனடைவது போல் உணர்ந்தால், கோதுமையைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. ஏனெனில் அரிசியினால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் கோதுமையைக் கொண்டு இட்சி செய்து சுவைக்கலாம்.

Trending News

Latest News

You May Like