1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? முத்தம் கொடுப்பதன் மூலம் இந்த நோய் பரவுமாம்..!

1

புதிய நபர்களைக் கட்டியணைப்பது, அன்பைப் பரிமாறும் அடையாளமாக முத்தமிட்டுக் கொள்வது எல்லாம் இயல்பாகிவரும் இன்றைய சூழலில் Kissing Disease பற்றி தெரியுமா உங்களுக்கு 

பொதுவாகவே பாலியல் நோய் என்றால் அவை உடலுறவு மூலம்தான் பரவும் என நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் முத்தத்தின் மூலமும் சில பாலியல் நோய்கள் பரவக்கூடுமாம்.

நோய் பரப்பும் மிகப்பெரிய ஊடகம் எச்சில் (Saliva) என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கொரோனா தொற்று அந்த விழிப்புணர்வை நமக்கு இன்னும் அழுத்தமாகப் புரிய வைத்தது. இந்த எச்சிலின் வழியாக Kissing Disease பரவி வருகிறது.

Infectious Mononucleosis என்பதுதான் முத்தநோய்க்கான மருத்துவப் பெயர். இந்தத் தொற்றானது முத்தத்தின் மூலமே அதிகம் பரவுகிறது என்பதை பல பரிசோதனைகளின் மூலம் ஆல்ஃப்ரெட் இவான்ஸ் என்கிற அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் உறுதிப்படுத்தினார். அதன்பிறகே இதற்கு Kissing Disease என்கிற செல்லப்பெயர் வந்தது.

மோனோநியூக்ளியஸ் தொற்றுக்கு எச்சிலின் மூலம் பரவும் Epstein-Barr Virus காரணமாக உள்ளது. இதனால் சுருக்கமாக EBV என்று இந்தத் தொற்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு Glanudlar Fever என்கிற பெயரும் உண்டு. அரிதாக பாலியல் உறுப்பின் சுரப்புகள், ரத்தம் போன்றவற்றின் மூலமும் பரவலாம். அதேபோல் தும்மல், இருமல், ஒருவர் பயன்படுத்திய டம்ளரில் தண்ணீர் அருந்துவது, இன்னொருவரின் டூத் பிரஷ்ஷை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளாலும் தொற்று பரவக்கூடும்.

முத்தத்தின் மூலம் கேவிட்டிஸ் ஏற்படும் என்பது பலரும் அறியாத ஒன்று. ஆனால் உண்மையில் இதற்கு வாய்ப்புள்ளது. முத்தமிடும் போது அதன் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் நுண்குழியை ஏற்படுத்தும். குறிப்பாக இது பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு அதிகம் பரவுகிறது, இளைஞர்களுக்கும் தங்கள் காதலன்/காதலியை முத்தமிடும் போது இந்த பாக்டீரிய தொற்று ஏற்படலாம். டூத்பிரஷை பகிர்ந்துகொள்வது, ஒரே பாத்திரங்களை சமைக்க இருவர் உபயோகிப்பது போன்ற பல காரணங்கள் இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

சளி, காய்ச்சல், குடல் தொடர்பான நோய்கள் போன்றவை முத்தங்கள் மூலம் பரவலாம் என பிரபல நாளிதழ் கூறியுள்ளது. இவை சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளாலோ அல்லது சுற்றத்தார் இருமுவதாலோ, தும்முவதாலோ கூட பரவலாம். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர் இன்னொருவரை முத்தமிடும்போது இந்த நோய்கள் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

எம்ஆர்எஸ்ஏ என்னும் இந்த நோய் நீங்கள் ஜிம்மில் இருக்கும்போதோ அல்லது மருத்துவமனையில் இருக்கும்போதோ அங்கிருக்கும் கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். ஆனால் இது முத்தங்கள் மூலம் பரவக்கூடும் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படும் இந்த நோய்கள் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சிபிலிஸ் என்பது வாயின் உட்புறத்தில் காயங்களை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நிலையில் மற்றவர்களை முத்தமிடுவது மிகவும் ஆபத்தானதாகும். மற்ற நோய்களை போலவே இதுவும் முத்தம் மூலம் பரவும், ஆனால் இதன் பாதிப்பு மற்ற நோய்களை விட அதிகமாக இருக்கும்.

ஹெர்பெஸ் வகையை சேர்ந்த இந்த சைட்டோமெகல்லோவைரஸ் நோயும் முத்தங்கள் மூலம் பரவக்கூடிய ஒன்று. அனைவரின் உடலிலும் உள்ள ஆன்டிபாடீஸ் இந்த னாய் தாக்கினாலும் நமக்கு அறிகுறியை காட்டாமல் பார்த்துக்கொள்ளும், அதனால் இந்த நோயால் பாதிக்கப்ட்டவர்களுக்கு உடனடியாக தான் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிய வாய்ப்பில்லை. இந்த நோய் தீவிரமடைந்த பின்தான் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

ஜிங்விட்டிஸ்
இது உங்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கலாம், முத்தமிடுவதால் ஜிங்விட்டிஸ் வைரஸ் பரவும்எ அபாயம் அதிகரிக்கும். முத்தமிடும்போது எச்சில்கள் பரிமாறப்படுவது உங்களுக்கு ஈறுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்களை இந்த நோயிலிருந்து பாதுகாக்கலாம்.


 

Trending News

Latest News

You May Like