1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்..!

1

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க... 

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைய செய்கிறது.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

11.நம்முடைய வயிற்றில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்தச் செய்வதோடு, ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கும் உதவி செய்கிறது.பழைய சாதம் மிகச்சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. குடல் இயக்கங்கள் சீராக இருப்பதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.24 மணி நேர குளிர்வூட்டலுக்கு பிறகு மாவுசத்து ஜீரணிக்கக்கூடிய வகையில் மாறுவதே இதற்கு காரணம்.. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள்.. இதனை ப்ரீபயாடிக் என்றும் சொல்கிறார்கள்.. இது நமது உடலின் ரத்தத்தில் எந்த விதத்திலும் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் அதேசமயம், குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறதாம்.

12.பழைய சோறு சாப்பிட்டுபவர்களுக்கு, அம்மை போன்ற தொற்று நோய்கள் வராது.

13.பழைய சாதத்தில் எதிர்ப்பு ஸ்டார்ச்கள் அதிகம் இருக்கிறதாம்.. அதேபோல, வைட்டமின் B நிறைய உள்ளதால், செரிமானமும் எளிதாகிறது.. ஆனால், இரவு ஊற வைக்கும்போதே, பழைய சாதத்தை, வெளியில்தான் வைக்க வேண்டுமே தவிர, ஃப்ரிட்ஜில் வைத்துவிடக்கூடாது.. சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு வேண்டுமானால், ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து கொள்ளலாம்.

14.பழைய சோற்றை, ஏறு வெயிலில் அதாவது மதியம் வரை மட்டுமே சாப்பிடுவது சாலச் சிறந்தது. இறங்கு வெயில் எனப்படும் மாலை நேரங்களில் உண்ணக்கூடாது.

15. குழந்தைகளுக்கு, பழஞ்சோற்றில், ஓரிரண்டு உப்புக்கல்லை சேர்த்து உண்ண கொடுத்தால் அதை விட சிறந்த ஊட்டச்சத்து பாணம் ஏதுமில்லை.

16,பழைய சோறு சாப்பிட்டால் மந்த நிலை ஏற்பட்டு, துாக்கம் வரும் என்று சொல்வதில், உண்மையல்ல. மூளை செல்களை துாண்டி, நன்கு சிந்திக்க வைக்கும்.

17.பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிட்டால் உடல் எடை கூடும். மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும். சிலர் பழைய சோற்றுடன் வெந்தயத்தை ஊற வைத்து அல்லது நல்லெண்ணையை ஊற்றி சாப்பிடுவர். இது மூல நோய்க்கு நல்ல மருந்தாகும்.

18.பழைய சோறுக்கு கைக்குத்தல் அரிசி தான் மிகவும் ஏற்றது. ஆனால், மாறி வரும் நவீன யுகத்தில் கைக்குத்தல் அரிசி கிடைப்பது சிரமம் என்பதால், குக்கரில் சமைத்த சாதத்தையே உண்ணலாம்.சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதை குறைந்தது ஆறு மணி நேரம் கழித்து உண்ண வேண்டும். அதே போல். ஊற வைத்த பின் பதினைந்து மணி நேரம் கடந்தும் உண்ண கூடாது.

பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.

பழஞ்சோற்றை, பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து, பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் முன், நாம் விழித்துக்கொண்டு கார்ன் பிளேக்ஸ், நுாடுல்ஸ் போன்றவற்றை தவிர்த்து, பழைய சோற்றை உண்டு, பயன்பெறுவோம்!

Trending News

Latest News

You May Like