இது தெரியுமா ? தினமும் 10000 அடிகள் நடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது உண்மையா?

10,000 படிகள் நடப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று பொதுவாக நம்பப்பட்டாலும்... இது உண்மையா ? வாங்க பார்க்கலாம்
நடைப்பயிற்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது.இது தசையின் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது. இது எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு போதுமான அளவு சூரிய ஒளி கிடைத்து விட்டமின் டியை ஒருங்கிணைக்கிறது.
ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது பொதுவான நம்பிக்கை. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி உங்களைத் தள்ளாதீர்கள்.வாக்கிங் செய்யும்போதான உங்கள் உடல் பொசிஷனும் முக்கியம். நேராகப் பார்த்தபடி உடலை நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது குதிகால்களிலிருந்து விரல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.மற்றபடி நடக்க வேண்டுமே என கடமைக்காக நடக்க வேண்டாம். தனியே நடக்க போரடித்தால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடக்கலாம்.
இப்போதுதான் முதல்முறை வாக்கிங் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம்.முதல்நாளே ஒரு மணி நேரம் வாக்கிங் செய்ய நினைக்க வேண்டாம். அப்படிச் செய்தால் அடுத்தநாளே களைப்பாகி, கால்வலியால் வாக்கிங் செல்ல மாட்டீர்கள்.
10,000 அடிகள் வாக்கிங் என்பது சமீப காலத்தில் டிரெண்டான விஷயமாகவே இருக்கிறது.ஆனால் எல்லோராலும் ஒரேயடியாக பத்தாயிரம் அடிகள் நடக்க முடியாது.
நாள்தோறும் 10,000 நடைகள் நடந்தால்தான் ஆரோக்கியமான உடல் சாத்தியம் என்ற ஒரு நம்பிக்கை பரவலாகி வருகிறது.இந்த எண் எங்கிருந்து தொடங்கியது, யார் இந்த எண்ணை நிர்ணயித்தார்கள், யாருக்காக இது நிர்ணயிக்கப்பட்டது, இதற்கான காரணம் என்ன ?
ஜப்பானில் 1960-ம் ஆண்டு ஒருவர் நாள்தோறும் 10,000 நடைகள் நடக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம், பீடோ மீட்டர் என்ற கருவி அதிகம் விற்பனையானது. இதற்கு நல்ல சந்தைப்படுத்துதலாக இந்த 10,000 நடைகள் உதவியது.
இந்த எண் கிட்டத்தட்ட எப்படி வந்தது என்றால், அடைவது சற்றுக் கடினமாகவும் இந்த எண்ணைப் பார்க்க கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்ததால்தானாம்.
உங்களின் அன்றாட வேலை நேரத்தைப் பொறுத்து நடைப்பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம்.உண்மையிலேயே உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சிக்கு நேரம் என்பது முக்கியமல்ல. உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் நடைப்பயிற்சி.அதைமட்டும் புரிந்துகொண்டால் இலக்குகள் எதுவும் உங்களை பாதிக்காது என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள்.
மேலும் நடைப்பயிற்சியை அதிகாலை மேற்கொள்வது கூடுதல் பலன்களை அளிக்கிறது.
► உடலில் தேவையற்ற கொழுப்புகளை வேகமாக எரிக்கிறது.
► மன அழுத்தத்தைக் குறைக்கிறது,
► ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
► உங்கள் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது.
► சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது.