1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்...

1

குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்  உலர் திராட்சை பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள்

உலர் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும்.

தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம்.

உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.

கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

பலவீனமான கண்களைக் கொண்டவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள பாலிஃபீனால்கள் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், கண்களில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். மேலும் ப்ரீ-ராடிக்கல்களால் கண்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இது மட்டுமின்றி, மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும். அதற்கு இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

உலர் திராட்சை எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது

உலர் திராட்சை சோடியத்தை உறிஞ்சி, உடலில் உள்ள அதிகளவு சோடியத்தைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு வழிகளின் மூலம், உலர் திராட்சை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன இது தவிர, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உலர் திராட்சையை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது.

உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும் இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடலில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுப் பொருட்களை எளிதில் அகற்றி, நச்சுக்களை நீக்க உதவுகிறது.

உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது.

உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் பசியைத் தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

உலர் திராட்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் இதய நோய், கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடும்.

Trending News

Latest News

You May Like