இது தெரியுமா ? கொள்ளுப்பருப்பை ஊற வைத்து அந்த நீரை அருந்தினால்...
1.. கொள்ளுப் பருப்பை இரவில் ஊற வைத்து, அந்த நீரை மறுநாள் காலை வெறும்வயிற்றில் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் குறைக்கும். கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும், வறுத்தும் சாப்பிடலாம்.
2.. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
3.. கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.
4.. உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.
5.. வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
6.. வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
7.. கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
8.. எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது.
9.. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
10.. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.
11.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதவிடாயையும் சீர்படுத்தும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
12.கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
13.கொள்ளை ரசமாகவோ, துவையலாகவோ செய்து சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், கொள்ளு சூப் வைத்து சுடச்சுட சாப்பிட்டால் இரண்டே நாட்களில் சளி, காய்ச்சல், மூக்கடைப்பு பறந்துபோகும்.
14.உடல் எடையை குறைக்க அதிக செலவிட வேண்டாம். தினசரி கொள்ளை பயன்படுத்தினாலே தொப்பையுடன், உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.
15.உடலில் உள்ள எலும்புக்கும், நரம்புக்கும் வலுவூட்டும் சக்தி கொள்ளு பருப்புக்கு உண்டு. கடினமான பணிகளில் ஈடுபடுபவர்கள் கொள்ளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.