1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கசப்புச் சுவை கொண்ட காய்கறிகளை அரிசி களைந்த நீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால்...

1

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அழகு சார்ந்த பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. இந்த நீர் கூந்தலின் நீளத்தை அதிகரித்து, முடி பாதிக்கப்படுவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக அரிசி கழுவியதும் அதன் நீரை கீழே கொட்டிவிடுவோம். அதற்கு பதிலாக சருமம் மற்றும் கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.

இதனை சூடுபண்ணி அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். அவை இன்றும் கிராமபுறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

இயற்கை க்ளென்சர் 

அரிசி நீர் என்பது சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் அசுத்தங்களை திறம்பட நீக்கும் இயற்கையான சுத்தப்படுத்தியாகும். இதில் உள்ள மாவுச்சத்து, அதன் இயற்கையான எண்ணெய்களின் தோலை அகற்றாமல், அழுக்குகளை உடைத்து அகற்ற உதவுகிறது.

பாகற்காய், சுண்டைக் காய் போன்ற கசப்புச் சுவை கொண்ட காய் கறிகளை அரிசி களைந்த நீரில் சில மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்தால், அவற்றின் கசப்பு சுவை குறைந்து ருசியாக இருக்கும்.

கிழங்கு வகைகளை அரிசி கழுவிய நீரில் வேகவைத்தால், சீக்கிரம் வெந்து விடும்.

கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை இந்த நீரில் ஊற வைத்து சமைத்தால், அவற்றின் அரிப்புத் தன்மை நீங்கி விடும்.

அரிசி கழுவிய நீரை வீணாக கிச்சன் சிங்க்கில் கொட்டாமல், அருகிலுள்ள கோசாலையில் உள்ள பசு மாடுகளுக்கோ, அல்லது தெருவில் சுற்றித் திரியும் மாடுகளுக்கோ பருகத் தரலாம். புண்ணியம் கிட்டும்.

தூய்மையான பருத்தித் துணியை அரிசி நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால், சருமத் துளைகள் மறைந்து சர்மம் பொலிவு பெறும்.

குளிக்கும்போது சிறிது அரிசி கழுவிய நீரை உங்கள் குளியலில் சேர்க்கலாம். இது அன்றைய மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் போக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

அரிசி கழுவிய தண்ணீருடன், கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், சிறிது அரிசி நீரைக் கலந்து தடவும்போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இளமைப் பொலிவு அதிகரிக்கும்.

அரிசி களைந்த நீரில் துருப்பிடித்த இரும்புப் பொருட்களை, சில மணி நேரங்கள் ஊற வைத்து எடுத்தால், துரு நீங்கிவிடும்.

அரிசி களைந்த நீர் செடிகளுக்கு நல்ல உரமாக பயன்படும்.

Trending News

Latest News

You May Like