1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பாலில் தேன் கலந்து குடித்து வந்தால்...

1

 ஒரு நாளைக்கு எவ்வளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஒருவர் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் எடுத்துக் கொள்ளலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நீங்கள் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் சரி.

அதாவது டீ, காபி இப்படி எந்த வகையில் நீங்கள் எடுத்தாலும் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. ஒருநாள் என்பது காலையில் இருந்து இரவு வரைக்கும். இந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த அரை லிட்டர் அளவு பாலை நீங்கள் மொத்தமாகவோ கொஞ்சம் கொஞ்சமாகவோ எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பாலில் கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நம்முடைய உடம்பிற்கும், எலும்புக்கும் முக்கியமானவை.

பாலை அதிக அளவு எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும். இதனால் இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். மாரடைப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறுநீரக கற்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கும். தேன் மற்றும் பால் ஒரு அற்புதமான உணவுக் கலவை. மிக முக்கியமாக பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைத்து மனதை அமைதியடையச் செய்யும். ஆரோக்கிய நன்மைகளோடு பால் கலந்த தேன் கலவை அற்புதமான சுவையை நமக்கு கொடுக்கிறது.

இந்த இரண்டு பொருள்களும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பல்வேறு உடல்நல சீர்கேடுகளை சரிசெய்ய இயற்கை தீர்வாக இந்த இரு பொருள்களும் பயன்படுத்தப்படுகிறது. பாலுடன் தேன் கலந்து குடிப்பது நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. பலரும் இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தேன் கலந்த பால் கொடுத்து வரும் பொழுது அவர்களுக்கு நிம்மதியான இரவு தூக்கம் கிடைக்கும்.

இது ஆய்வு ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 68 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அவர்களுக்கு 3 நாட்களுக்கு தினமும் இரண்டு முறை பால் மற்றும் தேன் கலந்த கலவை குடிப்பதற்கு கொடுக்கப்பட்டது. இது அவர்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுத்துள்ளது. மேலும் பல ஆய்வுகள் பால் மற்றும் தேன் இரண்டும் கலந்தோ அல்லது தனித்தனியாகவோ பயன்படுத்தும் பொழுது அது நல்ல தூக்கத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளது.

10 கிராம் அல்லது அரை டேபிள்ஸ் பூன் தேன் உறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடித்து விட்டு தூங்கும் பொழுது அது நல்ல தூக்கத்தை கொடுப்பது தெரிய வந்துள்ளது. அதுபோல சுவாசத் தொற்று நோய்கள் இருந்த 300 குழந்தைகளுக்கு இரவில் தேன் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு இரவு நேர இருமல் குறைந்தது தெரியவந்துள்ளது. அதுபோல 421 வயதான பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பால் அல்லது பால் பொருள்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் தூங்குவதில் எந்த வித சிரமமும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

எலும்பின் வலிமையை உறுதி அடைய செய்கிறது பால். பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது. இது நம்முடைய எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தொடர்ந்து பால்குடிப்பது நம்முடைய எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது. தொடர்ந்து பால் குடித்து வந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற பிரச்சனைகள் குறையும். பாலுடன் தேன் கலந்த கலவையை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்னும் அதிக நன்மையை கொடுக்கும்.

ஏனென்றால் தேனில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது பால் மற்றும் தேன் கலந்த கலவை. பால் ஹச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

மேலும் பாலில் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தின் அளவை குறைக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்து. தேன் ட்ரைகிளிசரைடுகள், மொத்த கொழுப்பு மற்றும் எல்டிஎல் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த இரு கலவைகளும் இதயம் சம்பந்தப்பட்ட பல நோய்களை வர விடாமல் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

Trending News

Latest News

You May Like