1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால்...

1

# சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

# அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

# நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

#எலுமிச்சைச் சாறுடன் சிறிது தேனைக் கலந்து மூன்று நாட்கள் குடித்துவந்தால், வாய்ப் புண்கள் குணமாகும். 

#அரிசித் திப்பிலியைப் பொடிசெய்து, தேனில் கலந்து, காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் அளவு மூன்று நாட்களுக்குச் சாப்பிட, வறட்டு இருமல் குணமாகும்.

#சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் சரியான ருசி உணர்வு தெரியாது. ஜாதிக்காய், மாசிக்காய் ஆகியவற்றைத் தூள் செய்து, தேனில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துத் தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட, நாவில் உள்ள சுவை நரம்புகள் தூண்டப்பட்டு நன்றாகச் சுவையை உணர முடியும்.

#சிறிதளவு கருந்துளசியையும் மிளகையும் இடித்து இரண்டு மணி நேரம் தேனில் ஊறவைக்கவும். இதில், ஒரு டீஸ்பூன் அளவுக்குத் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர, சளியினால் வரும் ஜுரம் சரியாகும். 

# தோல் நீக்கிய பாதாமைத் தேனில் ஊறவைத்துத் தினமும் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு, அசதி நீங்கிச் சுறுசுறுப்பு உண்டாகும்.

# ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வர, ஆஸ்துமா, சளி, மூச்சிரைப்பு குணப்படும். 

# இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் கலந்து குடித்தால், நிம்மதியான உறக்கம் கிடைக்கும். 

# கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.

# ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

# கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

# வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

# கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

# சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

# உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினம் குடிப்பதற்கு சுடு நீரை பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

வாரம் ஒருமுறை முழுவதும் வெறும் பழவகைகள் மட்டும் உண்பது பலன் தரும். முடிந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை காலை முதல் மாலை வரை தண்ணீரை மட்டும் அருந்தி விரதமிருங்கள். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் வேறு உடல் நலப் பிரச்சனைக்கு மருத்துவம் எடுப்பவர்கள் முயற்சிக்க வேண்டாம்.

* குறிப்பு :

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எல்லா மருத்துவ முறைகளையும் பின்பற்ற கூடாது.

உடல் எடையை குறைக்க எவ்வளவு மருத்துவ முறைகள் பின் பற்றினாலும் உடற்பயிற்சி, சரியான நேரத்திற்கு உணவு அவசியம்...

Trending News

Latest News

You May Like