1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்த 5 பிரச்சினைக இருந்தால் நீங்கள் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ளக் கூடாது..!

1

நெய் மிக அதிக அளவில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு வைட்டமின் ஏ நிறைந்தது. பிட்யூ்ரிக் அமிலம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் என்றால் அது நெய் தான். 

அதேபோல நெய்யில் வைட்டமின், ஈ மற்றும் டி அதிக அளவில் இருக்கிறது. அதோடு மிக சில உணவு வகைகளில் மட்டுமே இருக்கிற லினோலிக் அமிலம் நெய்யில் மிக அதிக அளவில் இருக்கிறது.

ஆயுர்வேத உணவு முறையில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு. அனைவரும் தினசரி உணவில் ஒரு ஸ்பூன் அளவாவது நெய் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.அப்படி தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதனால் செல்கள் புத்துணர்ச்சியடைந்து நாள் முழுக்க உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது. பல ஆயுர்வேத மருந்துகள் நெய், தேன் ஆகியவற்றோடு தான் சேர்த்து சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நெய் முக்கியத்துவம் வாய்ந்த உணவு.

வயதாக, வயதாக எலும்புகள் தேய்மானம் அடையும். எலும்பு மஜ்ஜைகளில் உள்ள ஈரத்தன்மை குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் 40 வயதுக்கு மேல் மூட்டுவலி வந்து பாடாய் படுத்துகிறது. ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தினமும் சிறிது நெய் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பிரச்சினையே இருக்காது. ஏனெனில் இயற்கையாகவே நெய் தசைகளுக்கிடையே ஒரு லூப்ரிகண்ட் போல செயல்படும் தன்மை கொண்டது. நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால் இது மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும்.

சருமப் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக, சருமம் அதிக வறட்சியுடன் இருப்பவர்கள் நெய்யை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் நெய் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும செல்கள் புதுப்பிக்கப்படும்.அதோடு நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களும் புரதங்களும் சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

வல்லாரை எப்படி ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதோ அதேபோல, நெய்யும் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் எழுந்ததும் அரை ஸ்பூன் சுத்தமான பசு நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வாருங்கள். மிக விரைவிலேயே அவர்களுடைய ஞாபகத் திறன் மேம்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்.

நெய்க்கு இயற்கையிலேயே புற்றுநோய் செல்களைச் செயல்படாமல் செய்யவும் அதை அழிக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறது.நெய்யை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி பெறுவதாலும் இயல்பாகவே செல்கள் புதுப்பிக்கப்படுவதாலும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

வயிறு உப்பசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு நெய்யை அருமருந்து என்றே கூறலாம். காலை எழுந்ததும் பால், காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பாலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைவதோடு, குடல் புண்கள் ஆற்றும் சக்தி கொண்டது. அஜீரணக் கோளாறை நீக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

குளிர் காலங்களில் காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினை தொண்டைக் கட்டும் மூக்கடைப்பும் தான். இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அது நாளடைவில் சைனஸாக உருவெடுக்கும்.இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் குடிக்க தொண்டைக் கட்டு பிரச்சினை சிறிது நேரத்திலேயே சரியாகும். அதேபோல ஓரிரு துளிகள் நெய்யை லேசாக சூடுசெய்து மூக்கு துவாரங்களில் விட மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு குறையும்.

 காலையில் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்பவர்கள் கட்டாயம் நெய்யை சூடுசெய்து தான் எடுக்க வேண்டும். உறைந்த நிலையில் நெய்யைச் சாப்பிடக் கூடாது.தினமும் சாப்பிடும்போது பருப்போடு நெய்யை உருக்கி சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது. இது ஜீரணத்தை நன்கு மேம்படுத்தும். ஆனால் கீழ்கண்ட பிரச்சினை இருக்கிறவர்கள் நெய்யை வெறும் வயிற்றில் எடுக்காதீர்கள்.

பால் மற்றும் பால் பொருள்களால் ஏற்படும் அழற்சியை லாக்டோஸ் அழற்சி என்று சொல்லுவோம். பால் பொருள்களால் ஏற்படக்கூடிய அழற்சி இருப்பவர்கள் நெய்யை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.அதைமீறி எடுக்கும்போது டயேரியா மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

காலை வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள கொலஸ்டிரால் ஆக்சிடைசைடு ஆகி, இதய நோய் ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்யலாம். இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் இதயக் குழாய்களில் கொலஸ்டிராலை அதிகரிக்கக்கூடும். அதனால் இதய நோய் ஆபத்து உள்ளவர்கள் காலை வெறும் வயிற்றில் நெய் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நெய் சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்சினைகள் எதுவும் வராது. ஆனால் ஏற்கனவே கல்லீரல் பிரச்சினைகள் ஏதாவது இரு்ந்தால் அவர்கள் நெய்யை வெறும் வயிற்றில் எடுப்பதையும் அதிக அளவில் நெய் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.குறிப்பாக மஞ்சள் காமாலை, கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட பிரச்சினைகள் நெய்யை மிக கவனமாக, மிதமான அளவில் மட்டுமே எடுக்க வேண்டும்.

உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று டயட்டில் இருப்பவர்கள் நெய்யை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது.டயட்டில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 1 - 2 ஸ்பூன் அளவு நெய் எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். நெய்யில் ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறதோ அதேபோல கலோரிகளும் அதிகம் என்பதால், அதை மனதில் வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் காலை வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ளக் கூடாது.ஏனெனில் கர்ப்ப காலத்தில் பொதுவாகவே பெண்களுக்கு அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.இந்த பிரச்சினை உள்ளவர்கள் நெய்யை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம். அப்படி எடுக்கும்போது அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

Trending News

Latest News

You May Like