1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? கசகசாவை பாலில் அரைத்து உண்டால்...

1

இந்த கசகசாவை பாப்பி விதைகள் என்று அழைப்பார்கள். இவை அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த செடியாகும். இவை சிறுசெடி இனத்தை சார்ந்தது. இதனுடைய விதைகள் “மருத்துவ அரசன்” என்றும் சொல்லப்படுகிறது. இந்த கசகசா செடியில் வளரும்  மலர்கள் அலங்காரத்துக்காக  பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கசகசா விதைகள் எப்படி உருவாகிறது என்றால், அந்த பாப்பி செடிகளின்  விதைகளை தாங்கி இருக்கும் பை ஆனது முற்றிய பிறகு அவை முழுவதுமாக காய்ந்த பிறகு அதில் இருந்து கசகசா விதைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த கசகசா பையில் இருக்கும் விதைகள் முழுமையடையதா நிலையில் அந்த பையை கீறி அதில் இருந்து பால் எடுக்கப்படுகின்றன , அந்த பாலை “ஓபியம்” என்றும் அழைக்கப்படுகிறது.

கசகசா செரிமானத்திற்கு நல்லது. அத்துடன் மலச்சிக்கலை போக்கும். இதனால்தான் இந்த கசகசா விதைகளை குருமா குழம்பு, அசைவ உணவுகளின்போது சமைக்கிறோம். வாயு தொல்லையை சரி செய்யும். கசகசா தூக்கமின்மை பிரச்சினைக்கு உதவுகிறது. அத்துடன் சீதபேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் அவர்களுடைய பிரச்சினை சரியாகும். மேலும் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை போக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கிற்கும் இது அருமருந்தாக விளங்குகிறது. எலும்புகளை பலப்படுத்தக் கூடியது.

1. பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலரும் மன அழுத்தம் ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுகின்றனர். கசகசா இவர்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் சிறிதளவு கசகசாவை பேஸ்ட் போல அரைத்து சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்த பிரச்னையும் நீங்கும்.

2.எலும்புகளில் ஏற்படும் தீவிர காயங்களையும் இந்த இந்த கசகசா போக்குகிறது. இதில் மாங்கனீஸ் அதிகம் உள்ளதால் இந்த பண்பு இதற்கு உண்டு, உடல் பலம் பெற இந்த கசகசாவை பாதாம், முந்திரி, தேங்காய், வெள்ளரி விதைகளுடன் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது.நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் அழிக்கிறது. இந்த கசகசாவில் உள்ள துத்தநாகம் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு உதவுகிறது. அயோடின் குறைபாட்டை குறைக்க உதவுகிறது. அத்துடன் கண் பார்வையை மேம்படுத்தி வருகிறது. ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

3.இந்த விதைகள் இடுப்பு வலிக்கு சிறந்த மருந்தாகும். இவை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும். தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கசகசா, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றை அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து தலையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். தேமல் எனப்படும் தோல் நோயும் குறையும். இந்த கசகசாவுடன் வேப்பிலையை அரைத்து தடவினால் அம்மையால் ஏற்படும் தழும்புகள் மறையும்.

4. இதில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் செரிமான பிரச்னைக்கு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. உண்ணும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆகி உடல் இயக்கத்தை பலப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

5. படிக்கும் மாணவ, மாணவியருக்கு கசகசா ஒரு நல்ல மருந்தாகும். கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து, நரம்பு செல்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மாணவ, மாணவியர் கசகசாவை உண்ணும்போது அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மேலோங்குகிறது. படித்ததும் எளிதில் மறக்காமல் இருக்கிறது.

6. எலும்புகளுக்கு நல்ல வலுவினை ஊட்டக்கூடியது கசகசா. இதில் நிறைந்துள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்கனிசு எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. மூட்டு வலி வராமல் காக்கிறது.

7.கசகசா மற்றும் பூனைகாலி விதை இரண்டையும் சம அளவு எடுத்து, அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 5 கிராம் அளவு எடுத்து, பாலிம் கலந்து இரவு  நேரங்களில் உண்டுவர நரம்புதளர்ச்சி நீங்கும். உடல் வலிமை பெறும்.வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.

8.கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து  கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.

9. பெண்களை கருத்தரித்தல் பிரச்னையில் இருந்து காக்கிறது கசகசா. இது கருப்பைக் குழாயில் ஏற்படும் அடைப்புகளை அகற்றி கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

10. கசகசாவில் உள்ள நிறைவுறா கொழுப்புகள், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது இதயத்தின் அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

11. கசகசா குறைந்த அளவில் உட்கொள்ளவே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இதிலுள்ள ஓபியேட்டு என்ற ரசாயனம் போதை தரக்கூடியது. இதனை குறைவாக எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.


 

Trending News

Latest News

You May Like