1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இந்த கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்...

1

பொன்னாங்கண்ணி தினமும் சமைத்து சாப்பிட்டால் உடல் உறுதியாகும். நோய் அகலும். ஆரோக்கியம் பெருகும்.கண்ணுக்கு ஒளியையும்,அழகையும் தந்து கண் பார்வையை தெளிவாக்கும் சக்தி பொன்னாங்கண்ணிக்கு இருக்கிறது. இதனை நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பகலிலேயே வானத்தில் நட்சத்திரங்களை காணலாம் என்ற சொல் வழக்கு உண்டு. பார்வை துல்லியமாகும் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

இந்த கீரையில் பார்வையை தெளிவாக்கும் வைட்டமின் ஏ மற்றும் கால்சியம், இரும்பு, தாது சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டம் சீராகும். முடி உதிராது. கூந்தல் தைலங்களில் பொன்னாங்கண்ணி முக்கிய மூலிகையாக சேர்க்கப்படுகிறது.

கண்எரிச்சல் ஏற்பட்டாலோ, கோடை காலங்களில் கண்கள் சிவந்தாலோ இந்த கீரையை அரைத்து ஒரு மெல்லிய துணியில் கட்டி கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.அதேபோல, இந்த கீரையை நெய்யில் வறுத்து வெள்ளை துணியில் வைத்து கண்களில் வைத்து கட்டினால், கண் பார்வை தெளிவுபெறும்.. இந்த இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து குளித்தால், கண்கள் பொலிவுபெறும்..

பாசிபருப்புடன் சேர்த்து இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், சரும பொலிவு கிடைக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும், அழகு மேம்படும். இந்த பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள் அபரிமிதமானவை.. காச நோய், இருமல், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக, இந்த கீரை பெரிதும் உதவுகிறது.

பொன்னாங்கண்ணி கீரையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து, சிறிதளவு நெய்யும் கலந்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் தசைப்பிடிப்புடன் தேறும். ஒல்லியாக இருக்கும் பெண்கள் இந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும்.

மூலசூட்டை நீக்கும் தன்மை இக்கீரைக்கு உள்ளதால், மலச்சிக்கல் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்து தலைக்கு குளித்தால் பிதநோய்கள் மற்றும் கண்நோய்கள் நீங்க வாய்ப்பிருக்கிறது.

இந்த கீரையில் உள்ள ஸ்பெஷலாட்டி என்னவென்றால், உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை கூட்டவும் இந்த ஒரே கீரை பயன்படுகிறது. அதாவது, எடை குறைவாக இருப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க விரும்பினால் பொன்னாங்கண்ணி இலையை துவரம் பருப்பு உடன் நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும்.. ஆனால், இந்த கீரையில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க உதவுமாம்.

தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தாலோ, அல்லது தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானாலோ, இந்த கீரையை உபயோகிப்பார்கள்.. இந்த கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதம் வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.. பிறகு அதை வடிகட்டி எடுத்துவைத்து கொண்டு, தலையில் தேய்த்து குளித்து வந்தாலே போதும், தலைமுடி உதிர்வது உடனடியாக நிற்கும்.. உடல் சூடு தணியும்.. கண்களிலுள்ள புகைச்சல் தணியும்.

மாலை கண் நோய்க்கு, இதே கீரையை வெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் தீர்வு கிடைக்கும். எந்தவகையிலாவது, இந்த கீரையை உணவில் சேர்த்து கொண்டால், பகலில் கூட நட்சத்திரங்களை பார்க்கலாம் என்பார்கள்..

Trending News

Latest News

You May Like