1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மட்டனின் இந்த பகுதியை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்..!

1

மட்டன், சிக்கன் சாப்பிட்டுவிட்டு, நிறைய சுடுதண்ணீரை குடிப்பார்கள்.. இப்படி வெந்நீர் குடித்தால், அசைவ பொருட்களில் உள்ள கொலஸ்ட்ரால் கரைந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.. அது தவறு.. அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு, சுடுதண்ணீர் குடித்தால், கொழுப்பு கரையும் என்று நினைத்து கொள்ளவே கூடாது.. சுடுதண்ணீர் எவ்வளவு குடித்தாலும், கொழுப்பு,+ கொலஸ்ட்ராலை துளியும் குறைக்காது.. வேண்டுமானால் உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி கொள்ள சுடுதண்ணீர் உபயோகப்படுமே தவிர, கொழுப்பை கரைக்க உதவாது.

ஆட்டுகறியின் ஒவ்வொரு பாகத்திலும் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. 

நமது இதயத்தில் ஏற்படும் வலி நாம் ஆடு இறைச்சி சாப்பிடுவதால் சரியாகிறது. மேலும் ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் நமது குடலில் உள்ள கழிவுகள் நீங்கி மேலும் நமது தலைப்பகுதில் உள்ள எலும்புகள் வலுவாகிறது.

ஆட்டு ஈரலில் அவ்வளவு சத்துக்கள் உள்ளது.  இரும்பு மற்றும் வைட்டமின் பி12 சத்துக்கள் மிகுதியாக உள்ளது. உங்கள் வாராந்திர உணவில் மட்டன் ஈரல்லைச் சேர்ப்பது இரத்த சோகையைப் போக்க அல்லது தடுக்க பெரிதளவில் உதவுகிறது. மேலும் உடலுக்கு நல்ல குளிர்ச்சி மிக்கதால் அவை உடல் சூட்டை தணிக்க சிறந்த உணவாகும்.

 உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும் சரி, சளி பிடித்தாலும் சரி எலும்பு முறிவு ஏற்பட்டாலும் சரி உடனே அனைவரும் சொல்வது ஆட்டின் நெஞ்செலும்பை வாங்கி சூப் வைத்து சாப்பிட்டால் சரி ஆகிவிடும் என்பதுதான். மட்டன் சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் எலும்பிற்கும் வலு சேர்க்கிறது.

 ஆட்டின் தலைகறியில் குறைந்த கொழுப்பு மட்டுமே உள்ளது. இரும்புசத்து மற்றும் புரதச் சத்து மிக்கதால் இவை மற்ற சிவப்பு இறைச்சிகளுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

 மட்டன் போட்டி என்றழைக்கப்படும் ஆட்டுக்குடல் பல்வேறு சத்துக்களைக் கொண்டது. ஆட்டுக்குடலில் வைட்டமின் A,B12,D,E மற்றும் K நிறைந்துள்ளது. இவை நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

ஆட்டின் மூளையானது, தாது விருத்தியை ஏற்படுத்துகிறது. கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளை அளிக்கிறது.ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

ஆட்டின் இறைச்சியானது கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது. கண் பார்வை குறை உள்ளவர்கள் ஆட்டுக்கறி சாப்பிடுவதன் மூலம் தெளிவான பார்வை பெற முடியும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

Trending News

Latest News

You May Like