இது தெரியுமா ? இந்த பழம் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்..!

அத்தி பழம் ஜாம் செய்தும், அத்திப்பழ டானிக் செய்தும் அருந்தலாம். மேலும் இது சாலட், கேக், ஐஸ்கிரீம், சான்ட்விச், ஸ்வீட், சூப் இவை தயாரிப்பதில் பயன்படுகிறது. அத்திப்பழங்களைப் பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடுவதால் பல பயன்கள் கிடைக்கும். இந்த பழங்களை உலரவைத்துப் பயன்படுத்தும் போது வெகுநாட்கள் வரை வைத்துச் சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த பதிவில் அத்தி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சத்துகள்
அத்தி பழங்களில் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே
பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஒரு அத்தி பழத்தில் நார்ச்சத்து: 5.8%,
பொட்டாசியம்: 3.3%, மாங்கனீசு: 3% , விட்டமின் பி6: 3%, கலோரி(37): 2% நிறைந்துள்ளது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்கும்
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும் .
மூல நோய்
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டால் மூலநோயைக் குணப்படுத்தலாம் .
பித்தம்
இதன் இலைகளை உலர வைத்துப் பவுடராக்கி இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வெண் குஷ்டம்
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
வாய்ப்புண்
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும் மற்றும் இதன் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும்.
இரத்த அழுத்தம்
அத்திப் பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது . நார்ச் சத்தும் அதிகமுள்ளதால் உடல்பருமனை குறைக்கிறது .
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
அத்தி இலைச்சாறு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் . சிலவகை புற்று நோய்களை கூட தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் கண் சம்பந்தமான நோய்களை தடுக்கும் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது.