இது தெரியுமா ? புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக 12 நாட்கள் சாப்பிட்டு வந்தால்...
புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.
புடலங்காய் இளசாக இருந்தாலும் சரி, முற்றலாக இருந்தாலும், ஒரேமாதிரியான சத்துக்களை தரக்கூடியது. நீர்ச்சத்து காய் என்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க செய்யும். இதனால், மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும். இதன் மூலம் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மலச்சிக்கல் இருந்தாலும் கூட, புடலங்காய் சாறு 2 ஸ்பூன் குடித்தாலே நிவாரணம் கிடைக்கும்.இதனால் குடல் புண்களும் ஆறிவிடும். குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு புடலங்காய்களை போலவே, புடலங்காயின் இலைகளும் மருந்தாகின்றன. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய் என்பதால், உடல் எடை குறைப்பதில் புடலங்காய்களின் பங்கு ஏராளம். இதன்மூலம் கொழுப்பையும் எளிதாக கரைக்க முடியும்.
எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.
இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
ஒருவேளை இரவில் சரியாக தூக்கம் வராவிட்டால் புடலங்காய் சாறு குடித்து வந்தாலே போதும் நரம்பு செயல்பாட்டை சீராக்கி நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மை போல அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
மஞ்சள் காமாலையின்போது, புடலங்காய் இலைகளையும், புடலங்காய்களையும் மருந்தாக தருவார்கள். அதாவது, மல்லி விதைகளுடன், இந்த புடலங்காய் இலையையும் சேர்த்து வைத்து நசுக்கி, அதன் சாறை மட்டும் மருந்தாக தருவார்கள்.இதனால், காமாலை குறைந்து கல்லீரல் பலப்படும். சிறுநீரகத்துக்கு இந்த புடலங்காய் கவசம் போன்றது. பொதுவாக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சிறுநீரகத்தை தாராளமாக பிரித்து வெளியேற்ற உதவும். அந்தவகையில், சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களையும், குடலில் நஞ்சுக்கள் இருந்தாலும் அதனையும் சேர்த்தே இந்த புடலங்காய் வெளியேற்றுகிறது. அதுமட்டுமல்ல, சிறுநீரகத்தில் திரவங்கள் சுரக்கப்படுவதையும் சீராக்கி, சிறுநீர்ப்பையின் பணிகளையும் செம்மைப்படுத்துகிறது.
புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்..
இந்த புடலங்காய்களை ஆண்கள் அதிகம் தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டுமாம். இதனால், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும் என்பார்கள். குளிர்ச்சி நிறைந்த இந்த புடலங்காய், மூல நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது. இந்த புடலங்காயை பச்சை பயிறு கூட்டு போல வைத்து, 12 நாட்கள் என இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தாலே மூலம் நீங்கிவிடுமாம். எனினும், இப்படி மருந்தாக உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிட்டால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும்.
சருமத்துக்கு மிகச்சிறந்த பொலிவையும், ஆரோக்கியத்தையும் இந்த புடலங்காய்கள் தரக்கூடியவை. புடலங்காயை குழந்தைகளுக்கு தந்து வந்தால், அவர்களுடைய ஞாபக சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள உஷ்ணமும் குறையும் அதேபோல், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புடலங்காயை அதிகமாக தர வேண்டுமாம். அவர்களுடைய ஹைப்பர் ஆக்டிவிட்டியை இது குறைக்கிறதாம்.