1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினசரி இரவில் படுக்கும் முன் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால்...

1

* தினசரி இரவில் படுக்கும் முன் செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் தொற்றுநோய் நம்மை அணுகாது.மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் நோயில் இருந்து  விடுபடலாம்.மேலும் அஜீரண கோளாறால் அவதி படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் சரி ஆகிவிடும்.

*பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழை  சாப்பிட்டு வந்தால் சரி ஆகிவிடும்.

* அண்ணாசிச்சாறு அருந்துவதால் மஞ்சள் காமாலை மட்டுப்படும். ஒரு டம்ளர் சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

* விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடல் வளர்ச்சியடையும் புத்தி கூர்மையாகும்.

* தேனும், பாலும் கலந்து அதில் ஆப்பிள் துண்டுகளை முக்கிச் சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தேனும், ரோஜா மலர் இதழ்களும், ஆப்பிள் துண்டுகளுடன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கும்.

* உடையாத கட்டிகளுக்கு வாழைப் பழத்தைக் குழைத்து போட கட்டி பழுத்து உடைந்து சீழ் வெளியேறிப் புண் ஆறும்.

* பப்பாளி பழக்காய்களை சமைத்தும், சாம்பாரில் போட்டும், சாப்பிட்டு வந்தால் சுவையும் அதிகரிக்கும் உடலில் இரத்தம் அதிகரிக்கும். 

* சளித்தொல்லை உள்ளவர்கள் கொய்யாப்பழத் துண்டுகளில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் நலம் பெறலாம். தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விரைவில் குணமாகும்.

* விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடல் வளர்ச்சியடையும் புத்தி கூர்மையாகும்.

* சோகை அடைத்த குழந்தைகளுக்குத் தினசரி இரண்டு தேக்கரண்டியளவு தேன் கொடுத்து வந்தால் நல்ல இரத்த விருத்தி அடைவர் சோகை நோயும் நீங்கும்.

* தினம் இரண்டு பேரீச்சம்பழமும், மூன்று முந்திரி பருப்பும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

Trending News

Latest News

You May Like