1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ராகியை கஞ்சி, கூழ், களியாக சாப்பிட்டால் நிச்சயம் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்..!

1

நீரிழிவு நோயாளிகளுக்கு ராகி நல்லது தான். ஆனால் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொருத்துதான் சர்ககரை ஏறுமா? குறையுமா என்பது இருக்கிறது.

ராகி என்றாலே பொதுவாக கஞ்சி, கூழ் அல்லது களியாக சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் அப்படி சாப்பிட்டால் நிச்சயம் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்குமோ தவிர குறையாது. கேழ்வரகை மாவாக எடுக்காமல் கெட்டியான உணவாக எடுத்துக் கொள்ளும்போது தான் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 

ராகியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (ஜிஐ) உள்ளது. அதனால் திடமான ராகி உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் மிக மெதுவாகக் கலக்க ஆரம்பிக்கும்.

நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால் ராகியை அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

ராகியில் நார்ச்சத்துக்களின் அளவு மிக மிக அதிகம். குறிப்பாக கரையும் நார்ச்சத்துக்கள் மிக அதிகம். அதனால் நீரிழிவை நிர்வகிப்பதற்கு இந்த நார்ச்சத்துக்கள் மிக முக்கியம்.

இது ரத்தத்தில் மிக மெதுவாக குளுக்கோஸை வெளியிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ராகியை உணவாக எடுத்துக் கொள்ளும்போது அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் பசியைக் கட்டுப்படுத்தும்.

குறிப்பாக உணவு உண்ட பின் நிறைய சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும். அதனால் நீரிழிவு நோயாளிகள் அதிக கலோரி உணவுகள் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க முடியும்.

ராகி இயற்கையிலேயே அதிகப்படியான நார்ச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் இதில் பசையம் மிக மிகக் குறைவு. செலியாக் நோய் போன்ற பசையம் அதிகம் கொண்ட உணவுகளால் ஏற்படும் பிரச்சினைகளோ அல்லது குளுட்டன் அழற்சியோ ராகியை ஏற்படும் போது உண்டாகாது.

ராகியை நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களுடைய உணவில் கீழ்வரும் வழிகளில் எடுத்துக் கொள்ளும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாகாமல் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

காலை உணவு - ராகி ரவை கஞ்சி, ராகி அடை, ராகி தோசை போன்றவாறு எடுத்துக் கொள்ளலாம்

மதிய உணவு - ராகி அடை (அ) ரொட்டி (அ) சப்பாத்தி, ராகி உப்புமா, முளைகட்டிய ராகி சாலட்,

இரவு உணவு - ராகி சூப், ராகி கிச்சடி


இப்படி எடுத்துக் கொள்ளும்போது ஊட்டச்சத்துக்களும் முழுமையாகக் கிடைக்கும். கிளைசெமிக் குறியீடும் குறையும். உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் ஆகாமலும் தடுக்க முடியும்.

Trending News

Latest News

You May Like