1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வெறும் வயற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால்...

1

தினமும் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.இதன் வாசனை காரணமாக சிலருக்கு இது பிடிப்பதில்லை என்றாலும் பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெறும் வயிற்றில் உண்பது மூலம் நாம் பல நன்மைகளைப் பெற முடியும். உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை வாரி வழங்குகிறது. மலச்சிக்கல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை குறைக்கும். இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலை பளபளவென வைத்துக்கொள்ளும்.

மலச்சிக்கல் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸை குணப்படுத்துவதோடு அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று புண்களை ஆற்றும் தன்மையுடையது பப்பாளி. குடலின் ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த டாக்ட்டர் பப்பாளி என்றே சொல்லலாம்.

இது குறைந்த அளவில் கலோரிகளை கொண்டிருந்தாலும் அதிக அளவில் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் உடல் எடையைக் குறைக்கவும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது, மேலும் வெறும் வயிற்றில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது வயிற்றுக்கு பல நன்மைகளை செய்கிறது. இது செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை அழித்து குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. மேலும் வயிறு உப்புசம், வயிறு கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் பப்பாளி உதவுகிறது.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர் உள்ளிட்ட ஏகப்பட்ட சத்துக்கள் பப்பாளியில் உள்ளது. சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை எளிதில் உறிஞ்சி கொள்ள இந்த சத்துக்கள் அனைத்தும் உதவுகிறது.

உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவு பப்பாளி தான். தினமும் காலையில் ஒரு பௌல் பப்பாளி சாப்பிட்டால் அது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இப்படியாக உடலுக்கு அதிக நன்மைகள் அளிக்கும் பப்பாளியை தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டுள்ளீர்கள் எனில் உங்களுக்குப் பப்பாளி கண்டிப்பாக உதவும், காலை உணவாக ஒரு கப் பப்பாளியை சேர்த்துக்கொள்வது உடல் எடை குறைப்பிற்கு நன்மை பயக்கிறது. உடல் எடை அதிகரிப்பிற்கு கலோரி முக்கிய காரணமாக உள்ளது. பப்பாளி குறைவான அளவில் கலோரிகளை கொண்டுள்ளது. அதே நேரம் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும் நார்ச்சத்தை இது அதிகமாகக் கொண்டுள்ளது.

இதனால் பப்பாளி உங்கள் பசியை கட்டுப்படுத்துவதோடு நீண்ட நேரம் வயிறை திருப்தியாக உணர வைக்கிறது. பப்பாளியில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இது தமனிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது, மேலும் இதனால் நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது, மேலும் இந்த சுழற்சியால் உடலில் உள்ள கொழுப்பின் அளவானது குறைகிறது, இதனால் நமக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பப்பாளி உதவுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இனி உங்களது உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

காலம் காலமாகப் பப்பாளி கண்களுக்கு நல்லது என்கிற பேச்சை பெரியவர்கள் கூற கேட்டிருப்போம், அது முற்றிலும் உண்மையே. பப்பாளியில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களான லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை கண்களுக்கு நல்லது மற்றும் கண்களில் வயது தொடர்பாக ஏற்படும் மாகுலர் சிதைவைத் தடுக்க இது உதவுகிறது.

நம் வீட்டில் பெரியோர்கள் பப்பாளி பழத்தைக் கர்ப்பிணி பெண்கள் உண்ணக்கூடாது என கூறுவதை கேட்டிருப்போம். அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவர்கள் சொல்வதிலும் சிறிது உண்மை இருக்கவே செய்கிறது.

பப்பாளியில் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய லேடேக்ஸ் என்னும் கலவை இருக்கிறது. கர்ப்பமாகி குழந்தை வளர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் கர்ப்பமாகி ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

பப்பாளி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மேலும் விலை குறைவான பழமாகும். எனவே இனி உங்கள் அதிகாலை உணவாக பப்பாளியை சேர்த்துக்கொள்ளலாம். 

Trending News

Latest News

You May Like