1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வந்தால்...

1

தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மிக மிக சிறந்த உணவாக அமையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பழைய சோற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் லாக்டோ பேசிலெஸ் ,ஈஸ்ட் பைடோ பாக்டீரியல் ,ஸ்டெப்சோ கண்டறிந்துள்ளனர்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இந்த வகையான பாக்டீரியாக்கள் இல்லாததினால் தான் பலவித குடல் சார்ந்த வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பழைய சோறு மூலம் கிடைக்க பெறும் பாக்டீரியாக்கள் மூலம் பலரது குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்துடன் நீரழிவு நோய்க்கும் பழைய சோறு அருமருந்தாக செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், சோடியம், மெக்னீசியன், கால்சியம், செலினியம் போன்ற தாதுக்கள் போதுமான அளவுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களாக காணப்படும் விட்டமின் பி6 மற்றும் விட்டமின் பி12 அசைவ உணவுகளில் மட்டுமே பெரும்பாலும் உள்ளது.

இந்த விட்டமின் பி6, பி12 பழைய சோற்றில் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலையில் பழைய சோறு சாப்பிடுவதனால் வயிறு சம்பந்தமான அனைத்து அஜீரண பிரச்சனைகளும் குணமாகும் .

பழைய சோற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகின்றது .மேலும், உடல் சோர்வை நீக்க உதவுகிறது.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பழையசோறு உண்பதினால் அதன் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகின்றது.

உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக பழைய சோற்றில் தான் உள்ளது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும் நீக்குகின்றது.

உடலில் ரத்தம் அளவு என கூறப்படும் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் கூட தினமும் காலையில் பழைய சொத்துடன் தயிர் அல்லது வெங்காயம் ஏதேனும் துவையல் போன்றவற்றை உடன் கலந்து சாப்பிடுவதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கின்றன.

பழைய சோற்றில் உள்ள தண்ணீரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை உப்பு கலந்து காலையில் தினமும் பருகி வருவதினால், குடல் ஆரோக்கியம் எனப்படும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு பெரிய தீர்வு காண முடிகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்களுக்கு ஏற்ற பழைய சோறு தண்ணீர்.

பெண்களுக்கு தலை முதல் கால் வரை உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பழைய சோற்று தண்ணீரின் முலம் தீர்வு காண இயலும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பழைய சோற்றை தண்ணீருடன் அரப்பு அல்லது சீக்காய் கலந்து தலைக்கு குளித்தால் கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இயலும்.

இதில் புரோ பயோடிக் மற்றும் பீரிபயோடிக் இருப்பதால் பெண்களுக்கு உடலில் ஏற்படும் அதிக உஷ்ணத்திற்கும் தீர்வு காண இயலும்.

பழைய சோறு சாப்பிடுவதால் ஐடி இன்பிலுமே டிசிஸ் என்னும் நோயை குணப்படுத்துகிறது என்று நிரூபணம் ஆகி உள்ளது.

பழைய சோற்றை எப்படி சாப்பிட வேண்டும்

நமது பாரம்பரியத்தில் பழைய சோறு என்பது ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது இத்துடன் ராகி கேழ்வரகு கம்பு போன்றவற்றும் பங்கு வகிக்கின்றது.

இவையெல்லாம் இரவில் ஒரு நாள் ஊறவைத்து உண்பதினால் பெர்மன்டேஷன் ( நொதித்தல்) நடைபெறுகிறது.

இதனால் இரும்பு சத்து கால்சியம் பொட்டாசியம் போன்ற வேதிப்பொருட்கள் அதிகரித்து உடலுக்கு நன்மை ஏற்படுத்துகின்றது.

ஆஸ்துமா மூச்சுரைப்பு உள்ளவர்கள் குளிர்காலத்தில் பழைய சோற்றை உண்ண வேண்டாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இயற்கையாக 100 கிராம் சாதத்தில் மூன்று மில்லி அளவிற்கு ஊட்டச்சத்து உள்ளதாம்.

இதுவே ஒரு நாள் இரவில் முழுவதும் ஊறவைத்து நொதிக்க விட்டு பின்பு உண்பதால் 100 கிராம் சாதத்தில் 43 மில்லி ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கின்றன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வயிற்று எரிச்சல் அல்சர் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு பழைய சோறு மட்டும்தான்.

குடல் சம்பந்தப்பட்ட வயிற்றுப் பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு ஒரு மாதத்திற்கு பழைய சோற்றை சாப்பிடுங்கள் அதற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர்களின் அறிவுரையின்படி அந்த நோயாளியும் ஒரு மாதத்திற்கு தினமும் காலை உணவாக பழைய சோற்றை சின்ன வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தார்.

பிறகு தன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று மருத்துவரை அணுகிய போது மருத்துவர்கள் நோயாளியை பரிசோதித்து உங்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவைப்படாது, இயற்கையாகவே உங்கள் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சீரான நிலைமைக்கு வந்துவிட்டது என்று கூறினார்.

இதற்கு காரணம் நீங்கள் ஒரு மாதமாக பழைய சோற்றை காலை உணவாக சாப்பிட்டு வந்ததால்தான் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

எனவே பழைய சோறு தான் இதுபோன்ற பல நோயாளிகளை அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி வருகிறது என்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like