1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? புதினா இலை, மிளகு ஒன்றாகச் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்...!

1

புதினா ஒரு வாசனையுடைய தாவரமாகும். இதன் வாசனையால் பிரியாணி போன்ற சமையலில் பயன்படுகிறது. வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மெல்வதால் வாயிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தான் மெந்தோ ஃபிரஸ், சுவீங்கம், மவுத் வாஷ் போன்றவற்றில் கூட இதை பயன்படுத்துகின்றனர். இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு தாவரமாகும். நிறைய மருத்துவ குணங்களை கொண்டு இருப்பதால் இந்த புதினா இலைகளை நீங்கள் டீ போட்டு குடிக்கலாம். இதன் மூலம் நிறைய நன்மைகளை பெற முடியும். தலைவலி, சீரண சக்தி, வாய் ஆரோக்கியம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்களும் நமக்கு உடம்பு வலிகளை நீக்க உதவுகின்றன. 

புதினா இலைகள் போட்டு டி குடிப்பதால் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது. இதன் இயற்கையான மருத்துவ பண்புகளால் தலைவலி சமயங்களில் புதினா டீ குடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது. மேலும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றில் இருந்து ஒரு தற்காலிக தீர்வை கொடுக்கிறது.

உங்களுக்கு இருமல் இருந்தால், துளி புதினா சாற்றை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து அதன் புகையை உள்ளிழுக்கவும். இதனால் வாய் மற்றூம் மூக்கு வழியாக நீராவி வெளியேறும் ஆஸ்துமா நோயாளிகளும் இதை செய்யலாம்.

புதினா இலை, வேப்பிலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகும்.

கருப்பையை ஆற்றவும் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் வலியை நீக்கவும் தினமும் காலையில் சில இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது புதினா இலைகளின் வாசனையை நுகர்வது சிறந்த வழியாகும்.

மூட்டு வலி, பல் வலி, தசை வலி, தலை வலி என பலவற்றுக்கும் புதினா இலைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட தைலங்கள் ஒரு நிவாரணியாக இருக்கின்றன.

புதினா இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு  தலா 100 மில்லி எடுத்து தேனில் (கால் லிட்டர்) ஊற்றிக் காய்ச்சி இறக்கவும், தினமும் காலை மாலை இருவேளையும்  15 மில்லி  குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் குமட்டல் உணர்வை போக்க இந்த கடினமான காலத்தை கடக்க சிரமமாக உணர்ந்தால் புதினா இலைகள் மென்று அல்லது புதினா தேநீர் குடிக்கலாம்.

புதினா இலையுடன்  கடுகு (ஒரு ஸ்பூன்) சேர்த்து  எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கண்களுக்கு கீழ் இருக்கும் இருண்ட வட்டங்களை குறைக்க புதினா சாற்றுடன் தக்காளி சாறு கலந்து 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு கண்களை கழுவி விடவும். இது சருமத்தை ஒளிர செய்யும். கண்களுக்கு கீழ் இருக்கும் இருண்ட வட்டங்களை குறைக்க செய்யும்.

புதினா இலைகளின் பேஸ்ட்டை எலுமிச்சை சாறுடன் கலந்து தலைமுடியில் தடவி 30-40 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து முடியை நன்றாக அலசி எடுக்கவும். இது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மேலும் புதிய முடி செல்களை புதுப்பிக்கிறது. முடி உதிர்தலை தடுக்கிறது.

புதினா இலை (ஒரு கைப்பிடி), மிளகு (5) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து  காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் குணமாகும்.

முகப்பருவை குணப்படுத்த புதினா இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். முகப்பருவை விரைவாக உலர்த்துவதோடு வடுக்களை அழிக்கவும் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும் உதவுகிறது.

உலர்ந்த புதினா இலையில் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் மஞ்சள் காமாலை, விக்கல், வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

உலர்ந்த புதினா இலையோடு கறுப்பு எள் (ஒரு ஸ்பூன்) சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் மாதவிலக்குக் கோளாறுகள்  குணமாகும்.

புதினவை சாப்பிட வேண்டியவர்கள்:

  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
  • தலைவலி உள்ளவர்கள்
  • உடம்பு வலி
  • வாய்த்துறுநாற்றம் உள்ளவர்கள்
  • புதினாவில் எண்ணற்ற நன்மைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு  90 மில்லி கிராம் முதல் 120 மில்லி கிராம் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது.

புதினா சாப்பிடாகூடாதவர்கள்:

  • கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • குடலிறக்கம் உள்ளவர்கள்
  • கர்ப்பிணி பெண்கள்
  • குழந்தைகள்


 

Trending News

Latest News

You May Like