1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வாரத்தில் 2 முறை பசும்பால் குடித்தபிறகு மாம்பழம் சாப்பிட்டு வந்தால்...

1

மாம்பழத்தில் பங்கனப்பள்ளி, அல்போன்சா, ராஸ்புரி, நிலம், மல்கோவா, கிளிமூக்கு என 12 வகை உள்ளது. பலவகையான மாம்பழங்கள் பயிரிடப்பட்டும், இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கின்றது. இதில் ஏதேனும் ஒரே ரகத்தை சேர்ந்த மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதய சம்பந்தமான நோய்கள் நல்ல தீர்வு கிடைக்கும்.

மாம்பழ சீசனில் தினமும் அல்லது வாரத்தில் 2 முறை, பசும்பால் குடித்தபிறகு, சிறிது மாம்பழம் சாப்பிட்டுவந்தால், குடல், மற்றும் வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள சர்க்கரை சத்தும், பாலில் உள்ள ப்ரோடீன், மற்றும் கால்சியம் சத்தும் சேர்ந்து சாப்பிட்டுவர உடல் மெலிந்தவர்கள், பலம் பெற்று, உடல் எடையும் கூடும்.

மாம்பழத்தில் இருக்கும் காரோட்டீனாய்டு சத்து உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பழத்தில் உள்ள அமிலேஸ் என்ற பொருள், மிக கடினமான உணவையும் கூட செரிக்க செய்திடும். மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய துடிப்பை சீராக உதவுகிறது. மாம்பழம் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதயத்தில் உள்ள செல்களை சேதமடையாமல் பாதுகாத்து, மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் சத்து கண் சம்பந்தமான, தூர பார்வை, கிட்ட பார்வை குறைபாடு, கண் எரிச்சல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து கண்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்று நோய் உருவாக்கக்கூடிய செல்களை அழித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனால் தான் இப்பழத்தை என்று சொல்லப்படுகிறது. இரத்த சோகை வராமலும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய கர்ப்ப இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மாங்கனியைக் கடித்துச் சுவைக்க, உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து, உள்ளுறுப்புகளை வளப்படுத்தும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். மாம்பழத்தில் இருக்கும் நொதிகள், செரிமானத்தைத் தூண்டும் ஆயுதமாக இருக்கின்றன. இதிலிருக்கும் நார்ச்சத்து மலச் சிக்கலுக்குத் தீர்வாகும்.

கற்கள், வேதிப்பொருள்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமானக் கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சனைகள் எனப் பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை. மாம்பழத்திலிருந்து வெளிவரும் வாசனையை அளவீடாகக் கொண்டு மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போலப் பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். கருநிறக் கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களைத் தாராளமாக வாங்கலாம்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
 

மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும்.

மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும்.
 

சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.

Trending News

Latest News

You May Like