1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்..!

1

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

பச்சை வாழைப்பழம், குடல் புண்களை ஆற்றி, அல்சர் போன்ற தொந்தரவுகளை அண்டவிடாமல் செய்கிறது. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.. வாழைப்பழத்திலுள்ள பொட்டாசியம் ரத்த நாளங்களின் சுவர்களை ஆரோக்கியமாக வைக்கிறது..அதேபோல், டயட்டில் இருப்பவர்கள், அல்லது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இந்த பச்சை வாழைப்பழத்தை தாராளமாக சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இதில் ஏராளமான ஆற்றல்கள் இருக்கின்றன..

பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யவும் பச்சை வாழைப்பழமே முக்கிய உதவியாக இருக்கிறது.. அதனால்தான், குழந்தைகளுக்கும் பச்சை வாழைப்பழத்தை வாரத்திற்கு ஒருமுறையாவது தர வேண்டும் என்கிறார்கள்.

ஸ்டார்ச் சத்து அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையை சர்க்கரை நோயாளிகளும் குறைந்த அளவு சாப்பிடலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு பச்சை வாழைப்பழத்தை விட பெஸ்ட் வேறில்லை என்கிறார்கள்... அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.. வைட்டமின் B6 நிரம்பியிருப்பதால், ஆக்ஸிஜனேற்றத்திற்கு பேருதவி புரிகிறது.. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து இந்த பச்சை வாழைப்பழம்.. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது. ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை உருக்கி வெளியேற்ற உதவுகிறது. அதனால், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், பச்சை வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிட்டால் நல்லது.

அதாவது, பச்சை வாழைப்பழத்தை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதில் உப்பு, மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க பேருதவி புரியுமாம்..


* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம். 

Trending News

Latest News

You May Like