இது தெரியுமா ? அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால்...
1. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
2. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
3. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
11. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.
தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
- தேனை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் பல நோய்களைத் தடுக்கிறது.
- இது சளி, இருமல் மற்றும் காய்ச்சலைத் தடுக்கவும் உதவுகிறது.
- தினமும் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால், மழைக்காலங்களில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினாலும், தேன் உட்கொள்வது நன்மை பயக்கும்.
- தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை நீக்குகிறது.
- தினமும் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் பலவீனம் நீங்கி உடலுக்கு பலம் கிடைக்கும்.
- தேன் தினமும் எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தை மேம்படுத்த உதவி செய்யும். குறிப்பாக இரவில் தூங்கச் செல்லும் முன்பாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
- தேனில் அதிக அளவு குளுக்கோஸ் மற்றும் ஃபரக்டோஸ் உள்ளது. இதை சருமத்தில் உள்ள புண் மற்றும் காயங்களின் மீது அப்ளை செய்வதால் அது காயங்களில் உள்ள கெட்ட நீரை உறிஞ்சி வேகமாக ஆறச் செய்யும்.