1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினம் ஒரு கைப்பிடி பாலக் கீரை சாப்பிட்டு வந்தால்

1

பாலக் கீரை என்று கூறப்படும் கீரையில் இரும்பு சத்து நிறைத்துள்ளதால் அந்த கீரையை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக பாலக் கீரை நீரிழி நோயாளர்களுக்கு மிகவும் நல்லது என்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சமன்படுத்தும் திறன் இந்த கீரைக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது 

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக, எலும்புகள் இளம் வயதிலேயே வலுவிழந்துவிடுகிறது. பாலக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், எலும்புகள் மிகவும் வலுவாக இருக்கும்.

உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த பாலக் மிகவும் நன்மை பயக்கும். அதாவது, உங்கள் உடலில் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் சமமாக உள்ளது. பால் சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய்வதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நினைப்பவர்கள் தங்கள் உணவில் பாலக்கை உட்கொள்ள வேண்டும். உங்களுக்கு பலாக்  கீரை பிடிக்கவில்லை என்றால் அதன் சாறும் அருந்தலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பாலக் கீரை ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிப்பதால் அனீமியா உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.

பாலக் கீரை சாப்பிடுவதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.

கண்பார்வை தெளிவாக இருக்க தேவையான சத்துக்களை பாலக் கீரை வழங்குகிறது.

கீரையை அடித்து செய்யப்படும் ஸ்மூத்தி உங்க காலை உணவை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது. எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்த பிறகு கூட இந்த மாதிரியான கீரை ஸ்மூத்தியை குடித்து உங்களை பூஸ்ட் செய்து கொள்ளலாம். உங்களுடைய நோயெதிரிப்பு சக்தி இரண்டு மடங்காக அதிகரிக்க இது உதவும்.

பொதுவாக ஆம்லெட் போட்டால் வெங்காயம், தக்காளி சேர்த்து பயன்படுத்தி இருப்பீர்கள். இது உங்களுக்கு வெறும் கலோரிகளை மட்டும் கொடுக்கலாம். ஆனால் முட்டையுடன் கீரையை சேர்த்து சாப்பிட்டால் கலோரியுடன் உங்களுக்கு ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் பசியை அடக்க உதவி செய்யும். நீங்கள் எடை இழக்க விரும்பினால் உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.

Trending News

Latest News

You May Like