1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் இந்த 9 பிரச்சனைகள் உங்களை நெருங்கவே நெருங்காது.!

1

நம்மில் பல பேர் ஆப்பிளை பழங்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதாக நினைக்கிறோம்.ஆனால் ஆப்பிளுக்கு இணையான சத்தை கொய்யாப்பழம் கொண்டுள்ளது. ஆப்பிளை விட கொய்யாப்பழம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியது. எனவே உங்களால் ஆப்பிளை வாங்கி சாப்பிட முடியாவிட்டால் கொய்யாப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.

சொல்லப்போனால் ஆப்பிளுடன் ஒப்பிடுகையில் கொய்யாப்பழத்தில் புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். அதோடு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகளவு கொய்யாப்பழத்தில் உள்ளன. அதுவும் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் பல நோய்களின் அபாயங்களில் இருந்தும் விடுபடலாம். கொய்யாவின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

Guava

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக கொய்யா உள்ளது. இதில் ஆரஞ்சு பழங்களை விட 2 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதிலும், நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக நம்மை பாதுகாப்பதிலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய ஆரோக்கியம்:

பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்த இந்த கொய்யா பழம், அதிகரித்து காணப்படும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL லெவலை அதிகரிக்கவும் உதவி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

Heart attack

உடல் எடை குறைப்பு:

கொய்யாவில் கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே இது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், எடையை கட்டுக்குள் வைக்க மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. அதிக கலோரி கொண்ட ஸ்னாக்ஸ்களுக்கு பதில் கொய்யாவை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

மூளை செயல்பாடு:

கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின்பி3 அதிகம் உள்ளது. எனவே இதனை டயட்டில் சேர்த்து கொள்வது மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, நரம்புகளை ரிலாக்ஸாக வைக்கிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

ஆரோக்கியமான சருமம்:

நம்முடைய சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சரும சுருக்கங்களை குறைக்கவும், நிறத்தை மேம்படுத்தவும் உதவும் கரோட்டின், லைகோபீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கொய்யாவில் நிரம்பி உள்ளன.

Skin

இனப்பெருக்க ஆரோக்கியம்: கொய்யா பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலிருக்கும் ஃபோலேட் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது:

நீரிழிவு நோய் உலகளவில் காணப்படும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. கொய்யாவில் அதிக நார்ச்சத்து மற்றும் லோ-கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக உள்ளது. கொய்யா இலை சாறு கூட ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக மேம்படுத்த உதவுகிறது.

மாதவிடாய் வலி குறையும்: பெண்கள் கொய்யா இலை சாற்றை தினமும் எடுத்து கொள்வது அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியின் தீவிரத்தை கணிசமாக குறைக்கும், சில சமயங்களில் சில வலி நிவாரணிகளைக் காட்டிலும் மிகவும் பயனுள்ளதாக கொய்யா சாறு இருக்கும்.

Periods

பார்வை திறனை மேம்படுத்துகிறது: கொய்யாவில் இருக்கும் அதிக அளவிலான வைட்டமின் ஏ நம்முடைய கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது. இந்த வைட்டமின் கண்பார்வை குறைவதைத் தடுக்கிறது மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் கண்புரை உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து கண்களை பாதுகாக்கிறது.

 

Trending News

Latest News

You May Like