1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் 5 கொய்யா இலைகள் சாப்பிட்டால் போதும் இந்த பிரச்சனைகள் வரவே வராது..!

1

எந்த வகை கொய்யா என்றாலும் அதன் சுவை அலாதியானது. விட்டமின் ஏ, விட்டமின் சி மற்றும் இரும்பு சத்து போன்றவற்றை கொண்ட இந்த கொய்யாவில் ஆண்டி ஆக்ஸிடென்ட் சத்துகள் நிறைந்துள்ளன. கொய்யா பழம் மட்டுமல்லாமல், கொய்யா இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. 

  • கொய்யா இலை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் எதிரியாக செயல்படுகிறது, உடலில் குளுக்கோஸ் என்கின்ற சர்க்கரை மூல கூரை இது தடுக்கிறது.கொய்யா இலை செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு நொதிகளைத் தடுக்கிறது.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலை ஆகியவை சிறந்த தேர்வாக அமையும். ஒரு நடுத்தர அளவிலான கொய்யா பழத்தில் 37 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆனால் அதை சாப்பிடும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும் மற்றும் நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாது. அதேபோல கொய்யா இலையை காய்ச்சி டீ போல அருந்தினால் பசி கட்டுப்படும்.
  • நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு உதவும் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான உணவுகளில் ஒன்றாக கொய்யா இலைகள் செயல் படுகிறது.
  • குழந்தை வரம் இல்லாமல் அவதி அடையும் ஆண்களும், பெண்களும் கொய்யா இலை சாப்பிட்டு வரலாம். ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கையை பெருக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற வலி நிவாரணியாகவும் கொய்யா இலை செயல்படுகிறது.
  • கொய்யா இலை செரிமான மண்டலத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டை குளுக்கோஸாக மாற்றும் பல்வேறு என்சைம்களைத் தடுக்கிறது, இது உங்கள் இரத்தத்தில் எடுத்துக் கொள்வதை குறைக்கும்.
  • நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்தும் திறன் கொய்யா இலைகளில் உண்டு. இதில் உள்ள எண்ணற்ற நல்ல நுண்ணுயிர்கள், உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும். மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். அசிடிட்டி மற்றும் குடல் வாய்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் கொய்யா டீ அருந்தலாம். நம் செரிமான கட்டமைப்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவியாக இருக்கும்.
  • கொய்யா இலைச் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தி, நீண்டகால இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்சுலின் சக்தியை அதிகரிக்கும்.
  • ஏதோ ஒரு காரணத்தால் சருமத்தின் அழகு பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கொய்யா டீ அருந்தலாம். இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் சருமம் பொலிவு பெற உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புது செல்கள் உருவாக இது வழிவகை செய்யும். பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை மறையும்.
  • ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற உயிர் அபாய பாதிப்புகளுக்கு சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை தான் அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. ஆனால் தினசரி கொய்யா டீ அருந்தும் பட்சத்தில் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் மற்றும் கெட்ட கொழுப்புகள் கரையும்.
  • இயற்கையாகவே உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் மேம்படுத்திட வேண்டும் என்று விரும்பினால் தினசரி கொய்யா டீ அருந்தலாம் அல்லது கொய்யா இலைகளை மென்று திண்ணலாம். உடலில் உள்ள அலர்ஜிகள், கரகரப்பான தொண்டை, காயங்கள் போன்ற பல சிக்கல்களுக்கு இது நல்ல தீர்வை கொடுக்கும். உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும்.

கொய்யா டீ தயாரிப்பது எப்படி.? ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். 4, 5 கொய்யா இலைகளை கழுவி தண்ணீரில் சேர்த்து லேசான சூட்டில் கொதிக்க விடவும். மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் வற்றிய பிறகு, இறக்கி விடவும். பின்னர் சூடு ஆறிய பிறகு அப்படியே பருகலாம் அல்லது தேன் கலந்து அருந்தலாம்.

கொய்யா இலை தரும் மருத்துவ குணங்கள் :

1. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

2. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

3. மாதவிடாயின் வலி அறிகுறிகளைப் போக்க உதவலாம்.

4. உங்கள் செரிமான அமைப்புக்கு பயனளிக்கலாம்.

5. எடை இழப்புக்கு உதவலாம்.

6. புற்றுநோய்க்கு எதிராக செயல்படும்.

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்.

8. சருமத்திற்கு நல்லது.

9. கொழுப்பைக் குறைக்கிறது.

10. சளி மற்றும் இருமலை குணப்படுத்தும்.

11. முடி உதிர்தலைத் தடுக்கிறது.

12. பல்வலிக்கு தீர்வு தரும்.

13. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

14. இரைப்பை குடல் சிக்கல்களைத் தீர்க்கிறது.

15. உங்கள் மூளைக்கு நல்லது.
 

Trending News

Latest News

You May Like