இது தெரியுமா ? 21 நாட்கள் 21 செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்...
சிறியவர்கள் முதல் பெரியவர்களை வாழைப்பழத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் செவ்வாழைப்பழம். இந்த பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழமாகும். இந்த செவ்வாழைப்பதை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் நமது உடலில் நிகழும்.
செவ்வாழை பழம் பயன்கள்
செவ்வாழையில் பொட்டாசியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறதாம்.மேலும் இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதாம்.
நரம்பு தளர்ச்சி ஏற்படும் போது நமது உடலில் இருக்கும் பலம் குறையும் எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாவதுடன் ஆண் தனமாய் சீரடையுமாம்.
மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொறி, சிரங்கு, தொழில் வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த நிவாரணம் தருகிறது. சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழையை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வர சரும நோய் சரியாகும் என குறிப்பிடப்படுகிறது.
குழந்தை இல்லாத தம்பதிகள், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும்
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
மேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.