1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வெறும் வயிற்றில் 10 "கறிவேப்பிலை" சாப்பிட்டு வந்தால்...

1

கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு  அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும். புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவுகிறது.

வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும். வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கறிவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தியைத் தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று  இரச்சலைத் தடுக்கும்

கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த  சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.

தினமும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை ஏற்படாது. மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். எனவே தினம் 10  கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை  ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.

இந்த கறிவேப்பிலை இலையை, நிழலில் உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, அதனுடன், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை..

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில், வாந்தி வரும்.. பசியின்மை, தலைசுற்றல் இருக்கும்.. செரிமான தொந்தரவும் நிறைய வரும்.. அப்போது, கறிவேப்பிலை பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் தொந்தரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். அனிமீயா உள்ளவர்கள், இந்த கறிவேப்பிலையை அடிக்கடி சட்னி செய்து சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் 15 முதல் 20 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், வயிறு சுத்தமாகும்.. அஜீரண கோளாறு நீங்கும்.. தேவையற்ற கொழுப்புகள் கரைந்து ஓடும்.. ரத்தம் விருத்தியாகும்.. ரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்... நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவும்..

இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.. தலைமுடி நன்றாக கருகருவென வளரும்.. கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் முழுவதுமே வெளியேறிவிடும்... அத்துடன் கல்லீரலுக்கும் பாதுகாப்பு தரும். மோருடன் பச்சை கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வந்தால், குமட்டல், வாந்தி பிரச்சனை நிற்கும்.. பச்சை கறிவேப்பிலையில் சாறு எடுத்து, அந்த சாற்றினை வயதானவர்கள் குடித்து வந்தால், பார்வை கோளாறுகளை தடுப்பதுடன், முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

Trending News

Latest News

You May Like